கிளாமர் வேற.. கவர்ச்சி வேற.. தப்பா புரிஞ்சிக்குறாங்க.. பூனம் பஜ்வா சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட்!

சென்னை: சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பஜ்வா.

தற்போது குருமூர்த்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தனசேகர் இயக்கத்தில், நட்டி ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பூனம் பஜ்வா நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

நடனம் நன்றாக தெரியும்

நடனம் நன்றாக தெரியும்

கேள்வி: உங்கள் சினிமா பயணம் எப்படி இருக்கிறது?

பதில்: 2009-ம் ஆண்டு சேவல் படத்தில் தொடங்கிய எனது பயணம் 2022ம் ஆண்டு வரை தொடரும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இதற்கு காரணம் ரசிகர்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவு தான். அவர்கள் மீதும் நானும் இரண்டு மடங்கு அன்பு வைத்துள்ளேன். குறிப்பாக தென்னிந்தியத் திரைப்படங்களில் நடிப்பது, குறிப்பாக சென்னைக்கு வருவது என்றாலே மிகவும் சந்தோஷமாக இருக்கும். சமூக வலைதளங்களில் என்னுடன் தொடர்பில் இருக்கும் ரசிகர்கள் தென்னிந்தியாவில் அதிகம். அவர்கள் எனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விசாரிப்பார்கள். எனக்கு நடனத்தில் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் விதமான திரைப்படங்கள் அமையவில்லை என்பது கொஞ்சம் வருத்தம் என்றார்.

96 சதவீத ஆண் ரசிகர்கள்

96 சதவீத ஆண் ரசிகர்கள்

கேள்வி: இன்ஸ்டாகிராமில் உங்கள் போட்டோக்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது எதனால்?

பதில்: இன்ஸ்டாகிராமில் எனது ஃபோட்டோக்கள் வைரலாகி உள்ளது எனக்கு மிகவும் சந்தோஷம் தான். இன்ஸ்டாகிராமில் 96 சதவீத ரசிகர்கள் ஆண்களே. இதுவரை நான் பதிவிட்டுள்ள போட்டோக்களில் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோக்கள் அதிகம். அது எதுவும் திட்டமிட்ட பதிவல்ல. சாதாரணமாக நான் எடுக்கும் போட்டோக்களில் அழகாக இருந்தால் அதை பதிவிடுவேன். ஆனால் மற்றவர்கள் சொல்லித்தான் அது வலைதளங்களில் வைரலானது என்பது எனக்குத் தெரியும். எதிர்காலத்தில் ஒரு ஃபோட்டோ ஷுட் செய்யும் திட்டம் உள்ளது. அப்பொழுது என்னுடைய படங்கள் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பதிவிடுவேன் என்றார்.

நயன்தாரா எனக்கு நல்ல தோழி

நயன்தாரா எனக்கு நல்ல தோழி

கேள்வி: உங்களுடன் இணைந்து நடித்த நடிகர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?

பதில்: என்னுடன் படங்களில் நடித்தவர்களுடன் படங்கள் முடிந்தபிறகு எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. நடிகர் ஜீவாவை பொறுத்தவரை, ரொம்பவும் இயல்பான சுபாவம் கொண்டவர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அவர் மனைவியும் என்னுடன் நன்றாக பேசுவார்கள். நடிகர் பரத்தும் அப்படித்தான். மிகத் திறமையான நடிகர். நடிகை நயன்தாரா மற்றும் நாகார்ஜுனாவுடன் தெலுங்கு படமான பாஸ் படத்தில் நடித்துள்ளேன். நயன்தாரா எனக்கு நல்ல தோழி. ஆனாலும் அவரை பற்றிய செய்திகளை படித்தோ, அல்லது கேட்டோ தெரிந்து கொள்வேன் என்றார்.

கண்ணாடி அணிவதும் கிளாமர் தான்

கண்ணாடி அணிவதும் கிளாமர் தான்

கேள்வி: திரைப்படங்களில் நடிகைகளின் கவர்ச்சி குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: நான் நடித்த தமிழ்த்திரைப்படங்களில் எனக்கு அமைந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் குடும்பபாங்கானவை. கிளாமராக நடிக்க எனக்கு வாய்ப்பு வரவில்லை. என்னைப் பொறுத்தவரை கிளாமர் என்பது உடலை மையப்படுத்திய விஷயமாக கருதவில்லை. 1950&60ம் ஆண்டுகளில் வந்த கருப்பு வெள்ளை திரைப்படங்களில் பெரிய கண் கண்ணாடிகள் அணிந்து, நீண்ட சேலைகளில் நடித்தது கூட கிளாமர் எனக் கருதலாம். திரையுலகை பொறுத்தவரை உடல் தெரிய நடிப்பது மட்டுமே கிளாமர் என நினைக்கிறார்கள். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/iHGTcZUG7Pc இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X