கண்ட இடத்துல வெங்கட் பிரபு தொட்டுட்டு போவார்.. பிரேம்ஜி எல்லாம் ரொம்ப மோசம்.. கோவா பட நடிகர் பேட்டி!

சென்னை: தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். ஆனால் ஒரே படத்தில் 12 வேடங்களில் நடித்த ஒரு நடிகர் என்றால் அது கோவா படத்தில் நடித்த ரவிகாந்த் என்பவர் தான். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கோவா படத்தில் நடித்த அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி பள்ளிக்கு செல்லும் வயதில் இருந்து தனக்கு பழக்கம் தான் என்றும் வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன் உடன் தான் அதிக நட்பு கொண்டிருந்தேன். படம் இயக்கும் போது வெங்கட் பிரபு என்னை நடிக்க வைத்தார். அதிலும், கோவா படத்தில் அத்தனை வேடங்களில் நடிப்பேன் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

Venkat Prabhu Premgi GOAT Goa interview

கோவா படத்தை தொடர்ந்து அஜித் நடித்த மங்காத்தா படத்திலும் எனக்கு நடித்த வாய்ப்பை வெங்கட் பிரபு கொடுத்தார் என ரவிகாந்த் பேசியுள்ளார். வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி இருவரும் ரொம்பவே சேட்டை பிடித்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

12 கெட்டப்: சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தில் 12 கெட்டப்பில் நடித்த ரவிகாந்த் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் கோவா படத்தில் நடித்த அனுபவத்தையும் இயக்குநர் வெங்கட் பிரபு குறித்தும் பல சுவாரஸ்ய விஷயங்களை கூறியுள்ளார். சர்தார், போலீஸ், பெண் வேடம், நாட்டாமை, வெளிநாட்டுக்காரர் என வித விதமான கெட்டப்புகளில் வெங்கட் பிரபு அந்த படத்தில் நடிக்க வைத்தார். ஆரம்பத்தில் எனக்கு ஒரு நாள் ஷூட் இருந்தது. அந்த காட்சி முடிந்ததும் அவ்வளவு தான் என நினைத்தேன். அதன் பின்னர் பாஸ்போர்ட் இருக்கிறதா? லங்காவியில் ஷூட்டிங் என்றனர். அதன் பின்னர் எனக்கு 12 கெட்டப் இருக்கு என வெங்கட் பிரபு கூறியதும் ஷாக் ஆகிவிட்டேன். ஆனால், ஜாலியான ரோல் என்றதும் பண்ண ஆரம்பித்தேன் என்றார்.

Venkat Prabhu Premgi GOAT Goa interview

பிரேம்ஜி ரொம்ப மோசம்: அந்த பார் சீனில் பெண் வேடமிட்டு நடித்து இருந்தேன். பிரேம்ஜி மற்றும் வைபவ் ரொம்ப மோசம். அவர்கள் என்னை வைத்து செய்த சேட்டை எல்லாம் வெளியே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு படாத பாடு படுத்தி விட்டனர் என ரவிகாந்த் பேசியுள்ளார். மேலும், வெங்கட் பிரபுவும் சும்மா விடவில்லை என்றார்.

கண்ட இடத்துல தட்டுவான்: பெண் வேடமிட்டு பெரிய பிரஸ்ட், பின்னாடி எல்லாம் செட்டப் செய்து வைத்திருந்தார்கள். க்ளீன் ஷேவ் செய்து விட்டனர். அங்கே ஷூட்டிங் பார்த்தவர்களே நான் பெண் தான் என நினைத்தனர். என்ன இந்த நடிகை இப்படி மோசமா நடிக்கிறது என பலரும் ஷாக் ஆனார்கள். இயக்குநர் வெங்கட் பிரபுவே கண்ட இடத்துல கை வச்சு தட்டிட்டுப் போவான். அதன் பின்னர் ஷூட் முடிந்து என் டிரெஸ் எல்லாத்தையும் ரிமூவ் பண்ண பின்னர் தான் அங்கிருந்தவர்களுக்கு நான் ஆண் என்று தெரியும் வந்து அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். அது எல்லாமே செம காமெடியாக நடந்தது. தப்பாக எதுவுமே நடக்கவில்லை. அந்த டீமே ஜாலியானவர்கள் என ரவிகாந்த் பேசியுள்ளார்.

Venkat Prabhu Premgi GOAT Goa interview

கோட் அப்டேட்: தளபதி விஜய்யின் 50வது பிறந்த நாள் வரும் ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்னமும் கோட் படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வரவில்லையே என சோசியல் மீடியாவில் வெங்கட் பிரபுவிடம் தளபதி ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர். #Thalapathy50 ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வாரம் விஜய் நடித்த போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை மறுதினம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X