For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லா பிரச்சனையிலும் கடவுள் எனக்கு உதவி செய்கிறார்.. நான் ரொம்ப லக்கி கேர்ள்.. பூரிப்பில் டிடி!

    |

    சென்னை: நடிகை குஷ்புவின் அவினி சினிமேக்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கத்தில் நடிகர் ஜீவா, மாளவிகா சர்மா, யோகிபாபு, டிடி நடிப்பில் உருவாகி இருக்கும் காபி வித் காதல்.

    இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் அக்டோபர் 7ம் தேதி வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் டிடி கலந்து கொண்டார்.

    இந்நிலையில் டிடி நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    வாரிசு, துணிவு படத்துடன் மோதும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' ஐமேக்ஸ்-3-D படம்..அயோத்தியில் டீசர் வெளியீடுவாரிசு, துணிவு படத்துடன் மோதும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' ஐமேக்ஸ்-3-D படம்..அயோத்தியில் டீசர் வெளியீடு

    ரசிகர்கள் மனதில் டிடி

    ரசிகர்கள் மனதில் டிடி

    சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடித்து ஆங்கராக மட்டுமில்லாமல் ஒரு நடிகையாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் டிடி. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் காபி வித் காதல் திரைப்படத்திலும் டிடி நடித்துள்ளார். சமீப காலமாக எங்கு சென்றாலும் வீல் சேரில் சென்று கொண்டிருக்கிறார் டி டி. காபி வித் காதல் படத்தின் ப்ரோமோஷனுக்கும் வீல் சாரிலேயே வந்து கலந்து கொண்டார் டிடி.

    திறமை, அறிவு

    திறமை, அறிவு

    கேள்வி: காபி வித் காதல் திரைப்படத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது?
    பதில்: இயக்குநர் சுந்தர்.சி உடன் பணிபுரிந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தில் நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது என்னவென்றால், அவருடைய திறமை, அறிவு போன்றவை தான்.

    எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

    எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

    கேள்வி: காலில் உள்ள ஏற்பட்ட பிரச்சனை எப்படியிருக்கிறது?
    பதில்: நான் எப்பொழுதும் டான்ஸர் தான். டிவியில் ஆடிக்கொண்டே தான் இருந்தேன். எனக்கு காலில் கொஞ்சம் பிரச்சனை உள்ளது. அவ்வப்பொழுது பிரச்சனைகள் வரும். பிறகு காணாமல் போய் விடும். காபி வித் காதல் திரைப்படத்தில் நடித்துள்ளேன். டிவியில் இருக்கும்பொழுது ஆதரவு தந்தது போல், சினிமாத்துறையிலும் ஆதரவு தர வேண்டுகிறேன். எனக்கு எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.

    கடவுள் உதவி செய்கிறார்

    கடவுள் உதவி செய்கிறார்


    கேள்வி: காபி வித் டிடி என்ற தலைப்பு போல் இப்படத்திற்கு காபி வித் காதல் என்ற தலைப்பு குறித்து...
    பதில்: எனக்கு அமைந்தது மிகப்பெரிய சந்தோஷம். நான் ரொம்ப லக்கி கேர்ள். எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் கடவுள் எனக்கு உடன் இருந்து உதவி செய்கிறார் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்டியூப் சேனலிலும் https://youtu.be/ipi1Y7y6rm0 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    Red Giant Produced, and Sundar C directed, Coffee with Kaadhal Movie Is going to Release in theatres on October 7. Before release, this movie promotional event happened recently Actor Divyadharsini gave a special interview to our filmibeat channel is here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X