படத்தின் க்ளைமாக்ஸை முடிவு செய்பவர் அவர் தான்... எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன அவர் யார் ?
சென்னை: விஜய்காந்த் ஆக்டிவ் ஆக மட்டும் இருந்திருந்தால், தமிழக அரசியலில் இரண்டு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்பட்டிருக்கும் என்று நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
Recommended Video
நடிகர் என்பதை விட விஜயகாந்த் மனிதநேய மிக்கவர், நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் என்பதை ஒரு நாளும் மாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
கதையை ஆரம்பிப்பது நாமாக இருக்கலாம். ஆனால் திரைக்கதையை அமைப்பதும், படத்திற்கு இடைவேளையை விடுவதும், படத்தின் இறுதிகாட்சியை அதாவது கிளைமாக்ஸ் எப்படி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்வது ஒருவர் மட்டுமே என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். அந்த ஒருவர் யார் என்பதை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சுவாரஸ்யமான தகவல்களை ரீவைன்ட் ராஜா நிகழ்ச்சியில் வினோத்துடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வு இங்கு நாம் பார்க்கலாம் .

குருவை மதிக்க தெரிந்தவர்
கேள்வி: நடிகர் விஜய்காந்த் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: விஜய்காந்த் நடிகர் என்பதை விட மனிதநேய மிக்கவர். நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். குருவை மதிக்க தெரிந்தவர். எனக்கும் அவருக்கும் சட்டம் ஒரு இருட்டறை ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அன்று முதல் 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். என்னையும், இயக்குனர் சுந்தர்ராஜனையும் எங்கள் இயக்குநர் என்று ஒவ்வொரு முறையும் பெருமையாக சொல்லுவார் .

அரசியலில் ஏற்பட்ட வெற்றியிடத்தை...
எனது படங்களில் அவருக்கு சமுதாயத்திற்காகவும், ஏழைகளுக்காகவும், தவறான சட்டத்திற்காகவும், தவறான அரசியல்வாதிகளுக்காக எதிராக போராடும் கதாபாத்திரங்களை அமைத்து நடிக்க வைத்திருப்பேன். இதன் பிரதிபலிப்பாக அவர் மனதில் மக்களுக்காக உழைக்க வேண்டும், சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் எண்ணம் மேலோங்கியது. அவர் ஆக்டிவ்வாக இருந்திருந்தால், இரண்டு வருடத்திற்கு முன்பு தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றியிடத்தை கண்டிப்பாக நிரப்பியிருப்பார். ஆளுங்கட்சியாக உருவாகியிருப்பார்.

அவர் முன்பே விஜய்க்கு சண்டை கற்று கொடுத்தேன்
கேள்வி: விஜய்காந்த் இன்று ஆக்டிவ் ஆக இருந்தால், உங்கள் அரசியல் பயணம் எப்படியிருக்கும்?
பதில்: 1992ம் ஆண்டு விஜய்காந்த மிகப்பெரிய, ரொம்ப பிஸியான நடிகர். அந்த காலக்கட்டத்தில் எனது மகன் விஜயை செந்தூரபாண்டிய என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்ய நினைத்தேன். அப்பொழுது நடிகர் விஜயகாந்த்யிடம் சென்று, கால்ஷீட் கேட்டேன். வேறு எந்த கேள்வியும் கேட்வில்லை. எத்தனை நாட்கள் என்று சொல்லுங்கள் நான் நடித்து தருகிறேன் என்றார் . 18 நாட்கள் பொள்ளாச்சிக்கு வந்து நடித்து கொடுத்தார். அவர் முன்பே விஜய்க்கு சண்டை காட்சிகளில் நடிக்க கற்று கொடுத்தேன். விஜயகாந்த்மும் விஜயை பாராட்டினார். அதனால் விஜய்காந்த் மிக பெரிய அரசியல் தலைவராக வெற்றி பெற்று முதல்வர் ஆகி இருந்தால் கூட எனக்கும், எனது குடும்பத்தாருக்கும், விஜய்காந்தக்கும் என்றும் என்றென்றும் ஒரு நெருடலும் ஏற்பட்டிருக்காது என்பதை ஆணித்தரமாக கூற முடியும்.
இறைவன் மட்டுமே என்றார்
நான் ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். கதையை ஆரம்பிப்பது நாமாக இருக்கலாம். ஆனால் திரைக்கதையை அமைப்பதும், படத்திற்கு இடைவேளையை விடுவதும், படத்தின் இறுதிகாட்சியை அதாவது கிளைமாக்ஸ் எப்படி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்வது இறைவன் மட்டுமே என்றார் எஸ்.ஏ .சி.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/BcH6M8h2fv4 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் எஸ் ஏ சி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











