லாக்டவுன் பேட்டி: சம்பளத்தை ஏத்தப் போறேன்.. வீடியோ காலில் நடிகை விநோதினி செம ரகளை!
சென்னை: லாக்டவுன் முடிந்து ஷூட்டிங் ஆரம்பித்தால் தனது சம்பளத்தை ஏத்தப் போறேன் என நடிகை விநோதினி வீடியோ கால் மூலம் அளித்த பேட்டியில் செம ரகளையாய் பேசியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக சினிமா உலகம் முற்றிலும் முடங்கிப் போய் நிற்கிறது. பெரிய நடிகர்களுக்கு இந்த நேரம் ஓய்வை அளித்தாலும், சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் இந்த லாக்டவுன் மிகப்பெரிய சுமையாகவும், வருமானம் இன்றி வாடும் நிலையையும் உருவாக்கி உள்ளது.

FEFSI தொழிலாளர்கள் பசியால் வாடக் கூடாது என பல நடிகர்களும், தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு வீடியோ கால் மூலமாக பேட்டியளித்த நடிகை விநோதினி சுவாரஸ்யமான லாக்டவுன் பேட்டியை கொடுத்துள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், கோமாளி உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான ரோல்களில் நடித்து அசத்தி வரும் விநோதினி, லாக்டவுன் முடிந்தவுடன் தனது சம்பளத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளார்.
கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் நிச்சயம் சம்பளத்தை குறைக்கலாம். குறைக்க வேண்டும் என்று கூறிய அவர், தன்னை போல குறைந்த சம்பளம் வாங்கும் நடிகர்கள் யாரையும் சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதை கோரிக்கையாக வைத்துள்ளார். மேலும், இந்த கொரோனா காலத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது உள்ளிட்ட பல சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துள்ள நடிகை விநோதினியின் முழு பேட்டியை காண வீடியோ லிங்கை க்ளிக் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications











