twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்டன் கோபிகா நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார் கோபிகா. அடக்க ஒடுக்கப் புள்ளையாக அறிமுகமாகி, அப்படியே லேசான கிளாமருக்கு மாறி,திடீரென மார்க்கெட் டவுண் ஆகி காணாமலேயே போய் விட்டார் கோபிகா.நடித்த படங்கள் எல்லாம் நல்ல படங்களாக, வெற்றிப் படங்களாக இருந்தும் கூடகோபிகா காணாமல் போனது ரொம்பவே ஆச்சரியமான விஷயம்.தமிழில்தான் கோபிகா மார்க்கெட் இழந்து விட்டார். ஆனால் தாய்மொழியானமலையாளத்தில் கோபிகா ரொம்பவே பிசியாகத்தான் இருந்தார். மலையாளத்தில்முன்னணியில் இருந்த நடிகைகள் எல்லாம் தமிழுக்கு இடம் பெயர்ந்து விட்டதால்கோபிகாவுக்கு அங்கே பெரிய இடம் கிடைத்தது.முன்னணி நடிகர்களுடன் சின்னதாக ஒரு ரவுண்டு அடித்து விட்ட கோபிகா இப்போதுமீண்டும் தமிழுக்கு வரவுள்ளார்.தமிழைப் போலவே மலையாளத்திலும் கிளாமர் அலை தூக்கலாக அடிக்கஆரம்பித்திருப்பதால் மம்தா போன்ற கிளாமர் நாயகிகளுக்கு அங்கே கிராக்கிகூடியுள்ளது. இதனால் கோபிகாவுக்கு மலையாளத்திலும் டிமாண்ட் குறைந்துள்ளது.இந்த சமயத்தில்தான் அவருக்கு எம்டன் பட வாய்ப்பு வந்து சேர்ந்தது. எம்டன்,தமிழில் உருவாகப் போகும் புதிய படம்.பரத், கோபிகா ஜோடி சேரவுள்ள எம்டன் படம், ஒரு வித்தியாசமான காதல் கதையாம்.காவேரி, மெட்டிஒலி என இரண்டு மெகாஹிட் தொடர்களைக் கொடுத்தவர்திருமுருகன் தான் இதை இயக்குகிறார்.மெட்டி ஒலி மூலம் தமிழக மக்களை அழோ அழு என்று அழ வைத்து கிட்டத்தட்ட 2வருடங்கள் வேடிக்கை பார்த்தவர். காரைக்குடிக்காரரான திருமுருகனுக்கு இது தான் முதல் படம் என்பதால் ஒவ்வொருகேரக்டருக்கும் பார்த்து பார்த்து ஆட்களை தேர்வு செய்துள்ளார். தனது கதைக்கு கோபிகாதான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரைஅணுகியுள்ளார். மெட்டி ஒலி குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த கோபிகா,உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம்.அதேபோல பரத்தின் கால்ஷீட்டும் ஈசியாக கிடைத்து விட்டது. விரைவில் படத்தைதொடங்க இருக்கிறார்கள்.படத்திற்கு எம்டன் என்று ஏன் பெயர் வைத்தீர்கள் சாமி என்று திருமுருகனிடம்கேட்டபோது, சும்மாதான், அதை மாற்றி விடலாம் என்றிருக்கிறோம் என்றுசாதாரணமாய் சொல்லிவிட்டுப் போனார்.பரத்தும், கோபிகாவும் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாக பின்னர் தமிழுக்கு வந்த4 தி பீப்பிள் என்ற படத்தில் நடித்துள்ளனர். அதன் பிறகு இருவரையும் இணைத்துஏகப்பட்ட வதந்திகள் வந்தன.அதன் பிறகு இப்போது மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளனர். இதில் பரத்தின்அப்பாவாக வித்தியாசமான கேரக்டரில் நாசர் நடிக்கிறாராம்.எம்டன், கோபிகாவுக்கு தமிழில் ரீஎண்ட்ரி கொடுக்குமா? அல்லது அந்தக் காலஎம்டன் (ஜெர்மனியின் போர்க் கப்பலான எம்டன், 2ம் உலகப் போரில் சென்னையில்குண்டு போட்டது) போல அவரது நம்பிக்கையில் குண்டைப் போடுமா?

    By Staff
    |

    நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார் கோபிகா.

    அடக்க ஒடுக்கப் புள்ளையாக அறிமுகமாகி, அப்படியே லேசான கிளாமருக்கு மாறி,திடீரென மார்க்கெட் டவுண் ஆகி காணாமலேயே போய் விட்டார் கோபிகா.

    நடித்த படங்கள் எல்லாம் நல்ல படங்களாக, வெற்றிப் படங்களாக இருந்தும் கூடகோபிகா காணாமல் போனது ரொம்பவே ஆச்சரியமான விஷயம்.

    தமிழில்தான் கோபிகா மார்க்கெட் இழந்து விட்டார். ஆனால் தாய்மொழியானமலையாளத்தில் கோபிகா ரொம்பவே பிசியாகத்தான் இருந்தார். மலையாளத்தில்முன்னணியில் இருந்த நடிகைகள் எல்லாம் தமிழுக்கு இடம் பெயர்ந்து விட்டதால்கோபிகாவுக்கு அங்கே பெரிய இடம் கிடைத்தது.

    முன்னணி நடிகர்களுடன் சின்னதாக ஒரு ரவுண்டு அடித்து விட்ட கோபிகா இப்போதுமீண்டும் தமிழுக்கு வரவுள்ளார்.


    தமிழைப் போலவே மலையாளத்திலும் கிளாமர் அலை தூக்கலாக அடிக்கஆரம்பித்திருப்பதால் மம்தா போன்ற கிளாமர் நாயகிகளுக்கு அங்கே கிராக்கிகூடியுள்ளது. இதனால் கோபிகாவுக்கு மலையாளத்திலும் டிமாண்ட் குறைந்துள்ளது.

    இந்த சமயத்தில்தான் அவருக்கு எம்டன் பட வாய்ப்பு வந்து சேர்ந்தது. எம்டன்,தமிழில் உருவாகப் போகும் புதிய படம்.

    பரத், கோபிகா ஜோடி சேரவுள்ள எம்டன் படம், ஒரு வித்தியாசமான காதல் கதையாம்.காவேரி, மெட்டிஒலி என இரண்டு மெகாஹிட் தொடர்களைக் கொடுத்தவர்திருமுருகன் தான் இதை இயக்குகிறார்.

    மெட்டி ஒலி மூலம் தமிழக மக்களை அழோ அழு என்று அழ வைத்து கிட்டத்தட்ட 2வருடங்கள் வேடிக்கை பார்த்தவர்.

    காரைக்குடிக்காரரான திருமுருகனுக்கு இது தான் முதல் படம் என்பதால் ஒவ்வொருகேரக்டருக்கும் பார்த்து பார்த்து ஆட்களை தேர்வு செய்துள்ளார்.


    தனது கதைக்கு கோபிகாதான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரைஅணுகியுள்ளார். மெட்டி ஒலி குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த கோபிகா,உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம்.

    அதேபோல பரத்தின் கால்ஷீட்டும் ஈசியாக கிடைத்து விட்டது. விரைவில் படத்தைதொடங்க இருக்கிறார்கள்.

    படத்திற்கு எம்டன் என்று ஏன் பெயர் வைத்தீர்கள் சாமி என்று திருமுருகனிடம்கேட்டபோது, சும்மாதான், அதை மாற்றி விடலாம் என்றிருக்கிறோம் என்றுசாதாரணமாய் சொல்லிவிட்டுப் போனார்.

    பரத்தும், கோபிகாவும் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாக பின்னர் தமிழுக்கு வந்த4 தி பீப்பிள் என்ற படத்தில் நடித்துள்ளனர். அதன் பிறகு இருவரையும் இணைத்துஏகப்பட்ட வதந்திகள் வந்தன.

    அதன் பிறகு இப்போது மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளனர். இதில் பரத்தின்அப்பாவாக வித்தியாசமான கேரக்டரில் நாசர் நடிக்கிறாராம்.

    எம்டன், கோபிகாவுக்கு தமிழில் ரீஎண்ட்ரி கொடுக்குமா? அல்லது அந்தக் காலஎம்டன் (ஜெர்மனியின் போர்க் கப்பலான எம்டன், 2ம் உலகப் போரில் சென்னையில்குண்டு போட்டது) போல அவரது நம்பிக்கையில் குண்டைப் போடுமா?

      Read more about: gopikabhatarh emton
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X