பாரதிராஜாவை பேட்டி கண்ட கவுதம் மேனன்!

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள நடுநிசி நாய்கள் படம் விரைவில் வெளியாகவுள்ளது. பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்களுக்குப் பிறகு, பக்கா சஸ்பென்ஸ் த்ரில்லராக படம் இதுதான் என்று கூறி வருகிறார் கவுதம் மேனன்.
எனவே தமிழின் முதல் திரில்லரான சிவப்பு ரோஜாக்கள் எடுத்த பாரதி ராஜாவை பெருமைப்படுத்தும் வகையிலும், நடுநிசி நாய்களுக்கான விளம்பர நோக்கிலும் நேற்று ஒரு சிறப்பு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் பாரதி ராஜாவை கவுதம் மேனன் பேட்டி கண்டார்.
"தமிழின் மிகச் சிறந்த த்ரில்லர் படம் என்றால் அது பாரதி ராஜாவின் சிவப்பு ரோஜாக்கள்தான். கிளாஸ்ஸிக் வகை த்ரில்லர் இது. அத்தகைய பெருமைக்குரிய படத்தைத் தந்த பாரதி ராஜாவை பேட்டி காண்பதில் பெருமைப் படுகிறேன்", என்றார் கவுதம்மேனன்.
கவுதம் மேனனின் இயக்கம் மற்றும் படங்கள் தன்னை வெகுவாகக் கவர்ந்துள்ளதாக பதிலுக்கு பாரதிராஜா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











