twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சி.எம். சிரிச்சுட்டாரு.. அரசு கொரோனா விளம்பரங்களை இயக்கும் இயக்குநர் EV கணேஷ் பேட்டி!

    |

    சென்னை: காமெடி நடிகர்களை வைத்து கொரோனா விளம்பரங்களை இயக்கி அசத்தி வரும் இயக்குநர் EV கணேஷின் சிறப்பு பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

    Recommended Video

    கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் | DIRECTOR E V GANESH CHAT | FILMIBEAT TAMIL

    பொதுவாக அரசு விளம்பரங்கள் என்றாலே சீரியஸாக சொல்ல வந்த கருத்துக்களை மட்டுமே சொல்லி வந்த நிலையில், கொரோனா போன்ற கொடிய நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எளிதாக கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்கில், காமெடி நடிகர்களை வைத்து கணேஷ் இயக்கிய விளம்பர வீடியோக்கள் நல்ல முயற்சி என்றே சொல்லலாம்.

    நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், இந்த வாய்ப்பு எப்படி தனக்கு கிடைத்தது என்பது குறித்து விரிவாக பேசியுள்ளார்.

    கால்ஷீட்டுக்காக சிவகார்த்திகேயனை தோனியுடன் கம்பேர் பண்ணல.. கடுப்பான பிரபல இயக்குநர்!கால்ஷீட்டுக்காக சிவகார்த்திகேயனை தோனியுடன் கம்பேர் பண்ணல.. கடுப்பான பிரபல இயக்குநர்!

    முதலமைச்சர்

    முதலமைச்சர்

    'கட்டில்' திரைப்படத்தை இயக்கி, தயாரித்து, நடித்து வரும் EV கணேஷின் திறமையை பார்த்து அவருக்கு இப்படியொரு அற்புதமான வாய்ப்பு இந்த லாக்டவுன் நேரத்தில் கிடைத்துள்ளது. மனோபாலாவை வைத்து இவர் இயக்கிய முதல் கொரோனா விளம்பர படத்தை பார்த்த முதலமைச்சர் பழனிசாமி சிரித்து விட்டார் என்றும், இந்த வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றியும் தெரிவித்தார்.

    ரோபோ சங்கர், ரவி மரியா

    ரோபோ சங்கர், ரவி மரியா

    இயக்குநரும் நடிகருமான ரவி மரியா மற்றும் ரோபோ சங்கரை வைத்து அடுத்ததாக இயக்கிய கொரோனா விளம்பரமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. டிக்டாக் தடைக்கு முன்னதாக அந்த வீடியோவை பலரும் டிக்டாக் செய்து வந்த நிலையில், அந்த விளம்பரத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ஏகப்பட்ட கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களை உருவாக்கும் பணியை அரசு இவரிடமே கொடுத்து வருகிறது.

    பெரியப்பா விளம்பரம்

    பெரியப்பா விளம்பரம்

    ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரனாக நடித்து கலக்கிய பிரபல இலங்கை எழுத்தாளும் நடிகருமான ஜெயபாலன் மற்றும் தேவயாணி நடிப்பில் அடுத்ததாக உருவாக்கப்பட்ட கொரோனா விளம்பரமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாஸ்க் அணிந்து கொண்டும் 60 வயதுக்கு மேற்பட்டவர் வெளியே சுற்றக் கூடாது என்ற அக்கறையுடன் அந்த விளம்பரத்தை இயக்கிய அனுபவங்களையும் இந்த பேட்டியில் இயக்குநர் பகிர்ந்துள்ளார்.

    இ பாஸ் அவசியம்

    இ பாஸ் அவசியம்

    தனி ஒருவனால் 100 பேருக்கு பரவிய கொரோனா என்ற கான்செப்டில் இவர் இயக்கிய குறும்படம் இ பாஸ் எடுக்க வேண்டியதின் அவசியத்தை வெளிப்படுத்தியது. நடிகர்கள் மாரி முத்து, பவன் நடிப்பில் உருவான இந்த விளம்பரத்தையும் கொரோனாவுக்காக உருவாக்கிய பாடல் என அனைத்தையும் இயக்குநர் பேட்டியுடன் சேர்த்தே இந்த வீடியோவில் கண்டு களிக்க வீடியோவை க்ளிக் செய்யுங்க!

    English summary
    Actor and Director EV Ganesh gave an exclusive interview to Tamil Filmibeat. He was praised by Tamil Nadu CM for his Corona ads.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X