நம்புனா நம்புங்க, நம்பாட்டி போங்க: செம கடுப்பில் நடிகர்

By Siva

மும்பை: அவதார் பட விவகாரம் தொடர்பாக மக்கள் தன்னை கலாய்த்தது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் நடிகர் கோவிந்தா.

அவதார் படத்தில் நடிக்குமாறு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கேட்டதாகவும் உடம்பில் பெயிண்ட் அடிக்க விருப்பம் இல்லாததால் நடிக்க மறுத்ததாகவும் பாலிவுட் நடிகர் கோவிந்தா பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

Govinda upset about Avatar trolls

மேலும் அவதார் என்ற தலைப்பை கேமரூனுக்கு பரிந்துரை செய்ததே நான் தான் என்றும் கூறினார் கோவிந்தா. அவரின் பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து மீம்ஸ் போட்டனர்.

கோவிந்தாவை அவதார் படத்தின் ஹீரோவாக நடிக்க அழைத்தார்களாம், என்னை கூட தான் அயர்ன் மேனாக நடிக்க அழைத்தார்கள் என்று பலரும் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தார்கள்.

இது குறித்து கோவிந்தா கூறியிருப்பதாவது,

கோவிந்தாவுக்கு ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததா என்று மக்கள் வியப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவருக்கு போய் வாய்ப்பு கிடைத்ததா என்று கூறுவது தவறு.

ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்க எனக்கு தகுதி இல்லாமல் இல்லை. டீ விற்றவர் எப்படி பெரிய நிலைக்கு வந்தார்?. தொலைக்காட்சி நடிகர்கள் படங்களில் எப்படி நடிக்கிறார்கள்?. இப்படி பேசுவது தவறு ஆகும். நான் கூறியதில் நம்பிக்கை இல்லை என்றால் பரவாயில்லை ஆனால் அதற்காக கண்டபடி பேச வேண்டாம் என்றார்.

அவதார் படத்தில் யார் உடம்பிலும் பெயிண்ட் அடிக்கவில்லை. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீல நிறத்தில் காட்டப்பட்டது. அப்படி இருக்கும்போது தனது உடம்பில் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்பதால் அவதார் படத்தில் நடிக்க மறுத்ததாக கோவிந்தா தெரிவித்தது சுத்தப் பொய் என்கிறார்கள் மக்கள்.

பாலிவுட்டிலேயே யாரும் கோவிந்தாவுக்கு வாய்ப்பு அளிப்பது இல்லை. அப்படி இருக்கும்போது ஜேம்ஸ் கேமரூன் அதுவும் அவதார் பட ஹீரோவாக நடிக்க அழைத்தார் என்பது எல்லாம் நம்புப்படியா உள்ளது என்று சமூக வலைதளங்களில் கேலி செய்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X