twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த கேள்வி மட்டும் வேண்டாம் ப்ளீஸ்.. அலறிய ஜிப்ஸி நாயகி.. எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

    |

    சென்னை: ஜிப்ஸி படத்தின் நாயகி நடாஷா அளித்துள்ள பிரத்யேக பேட்டி தற்போது வெளியாகி உள்ளது.

    Recommended Video

    Gypsy actress Natasha Singh | அரசியல் கேள்விக்கு அலறிய நடாஷா சிங்

    ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா நடிப்பில் உருவாகி உள்ள ஜிப்ஸி படம் நேற்று வெளியானது.

    Gypsy actress Natasha exclusive interview!

    ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கீ மற்றும் கொரில்லா படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

    கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஜிப்ஸி திரைப்படம், பல முறை சென்சார் பிரச்சனையில் சிக்கி, பல காட்சிகள் கத்தரிக்கப்பட்டு, தற்போது, வேற வெர்ஷனாக வெளியாகி இருக்கிறது.

    வெரி வெரி பேட் உள்ளிட்ட ரசிகர்கள் எதிர்பார்த்த பல விஷயங்கள் படத்தில் இல்லாதது ஜீவா ரசிகர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    என்னதான் சென்சார் போர்டில் காட்சிகளை கத்தரித்தாலும், யூடியூபில் சென்சார் இல்லாததால், அந்த காட்சிகளை வைத்தே படக்குழுவினர் ஜிப்ஸி படத்திற்கு புரொமோட் செய்து வருகின்றனர்.

    இந்த படத்தில், இந்தியா தான் எங்க ஆளுங்க.. நீங்க எல்லாம் என்ன லூசா என மிகவும் ஆழமான வசனத்தை பேசி நடித்த நடிகை நடாஷா நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

    முதல் நாள் ஷூட்டிங்கில் இருந்தே, நடிகர் ஜீவா தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், எந்த ஒரு காட்சியாக இருந்தாலும், கவலை படாதீங்க, ஈஸியா பண்ணிடலாம் என ரொம்ப கூலாக தனக்கு சப்போர்ட் பண்ணினார் ஜீவா என க்யூட்டாக பேசியுள்ளார்.

    அரசியல் மற்றும் காதல் படமாக உருவாகி உள்ள ஜிப்ஸி படம் பேசும் அரசியல் பற்றிய கேள்விகளுக்கு ஆளை விடுங்க சாமி என அலறியுள்ள நடாஷாவின் கலகலப்பான வீடியோவை கண்டு மகிழுங்கள்..

    English summary
    Gypsy movie actress Natasha gives an exclusive interview about her debut tamil film Gypsy. She talks lot about actor Jiiva and Director Raju Murugan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X