‘வலிமை‘ அஜித்தின் கதாபாத்திரம் இதுதான்... உண்மையை போட்டுடைத்த எச்.வினோத் !

சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

Recommended Video

Valimai படத்தின் Shooting-ல் தல உடன் நடந்த சுவாரசிய சம்பவம் | H.Vinoth Exclusive

இந்த படத்தை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ, தீம் மியூசிக் வெளியான நிலையில் இத்திரைப்படம் குறித்த பல சுவாரசியமான தகவலை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் எச்.வினோத்.

வலிமை

வலிமை

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சிறப்பாக முடிந்தது

சிறப்பாக முடிந்தது

இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவலை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் வலிமை பட இயக்குனர் எச்.வினோத். அதில் வலிமை திரைப்படத்தை நாங்கள் மிகவும் உற்சாகத்துடன் தொடங்கினோம். ஆனால், கொரோனாவால் படம் சற்று பின்னடைவதை சந்தித்தாலும் இறுதியில் சிறப்பாக முடிந்தது.

அது உண்மை இல்லை

அது உண்மை இல்லை

வலிமை திரைப்படத்தின் கதை அஜித்திற்காக எழுதப்பட்டது இல்லை என்று சில செய்திகள் உலா வருகின்றன. அது உண்மை இல்லை . நான் இந்த கதையை நீண்ட காலத்துக்கு முன்பு எழுதினேன், அஜித் இந்த படத்துக்குள் வந்த பிறகு, அவருக்கு ஏற்றவாறு நாங்கள் அதை மாற்றினோம்.

ஆக்ஷன்

ஆக்ஷன்

வலிமை வெறும் மோட்டார் சைக்கிள் பற்றி படம் மட்டும் இல்லை, ஆக்‌ஷன் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் என்றார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, ஒரு பைக் ரேசர் நேரடியாக எஸ்.ஐ ஆக பணியமர்த்தப்பட்டார். நாங்கள் அந்தச் சம்பவத்தை தழுவி இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளோம் என்று ஹெச்.வினோத் கூறியுள்ளார்.

புத்தாண்டுக்கு டிரைலர்

புத்தாண்டுக்கு டிரைலர்

வலிமை படத்தின் டிரைலர் அடுத்த வாரம் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு பண்டிகைக்கு வெளியிடப்படும். இதுதவிர மேலும் இரண்டு பாடல்கள் இருப்பதாகவும், அப்பாடல்களை வலிமை திரைப்படம் ரிலீசாகும் தினத்தன்று வெளியிட உள்ளதாக எச்.வினோத் தெரிவித்துள்ளார்.

ஏகே61

ஏகே61

மேலும் அஜீத்துடன் மீண்டும் AK61 படத்தில் இணைகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், வலிமை படம் வெளியான பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பல சுவாரசியத் தகவலை பகிர்ந்துள்ளார் எச்வினோத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X