கடின உழைப்பின் பலன் படத்தில் தெரியும் அண்ணே.. பிகில் கதிர்!
Recommended Video
சென்னை : ஜடா பட நாயகன் கதிர் அளித்துள்ள பேட்டியில், காலையில் சர்பத் படத்திலும், இரவில் பிகில் படத்திலும் நடித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த கடினமான உழைப்பின் பலன் படத்தில் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தில் எந்த வித அலட்டலும் இன்றி வெகு சாதாரணமாக பரியன் கதாபாத்திரத்தில் பொருந்தி, மெய் சிலிர்க்க வைத்து இருப்பார் கதிர். இந்த படத்தின் மூலம் பல பட வாய்ப்புகள் வந்துள்ளதால் அவர் பிசியாகி விட்டார். தற்போது ஜடா படம் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் விளம்பரத்திற்காக பிலிம்மி பீட்டில் பேட்டி தந்துள்ள அவர், பிகில் படத்தில் நடிக்கும் போதே சர்பத் எனும் படத்தில் நடித்து வந்ததாக கூறியுள்ளார்.

இந்த படம் திண்டுக்கல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. இதே நேரத்தில் சென்னையில் பிகில் படத்தின் இறுதிக்காட்சிகள் படமாக்கபட்டு வந்தன. காலையில் திண்டுக்கல் செல்லும் கதிர் மாலை ஆறுமணிக்கு அங்கிருந்து கார் மூலம் மதுரை வந்து, விமானம் மூலம் இரவு சென்னையில் நடக்கும் பிகில் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.
அங்கேயும் இங்கேயுமாக ஓடிக்கொண்டிருந்ததை கவனித்த தளபதி விஜய், ஏன் இப்படி உடம்பை வருத்திக் கொள்ளுறீங்கனு கேட்டாராம், அதற்கு பரவாலனா, இந்த உழைப்பு கண்டிப்பா படத்தில் தெரியும் என்று கூறியதாக சுவாரசியத் தகவலை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொரு படத்தையும் மிக நேர்த்தியாக தேர்ந்தெடுத்து வருகிறார். இதை பற்றி கேட்ட போது எந்த ஒரு நல்ல கதையாக இருந்தாலும் அதனை தேடிச்சென்று கேட்டு விடுவேன் அதுமட்டுமின்றி யாராவது இது நல்ல கதை என்று கூறினால் போதும் உடனே தேடிப்பிடித்து கதையை கேட்டு விடுவேன் என்று கூறினார்.
கதிரின் ஜடா வெளியாகி வேறலெவல் என்று மக்கள் சொல்லும் அளவுக்கு நல்ல வரவேற்பை பெற்று விட்டது. அடுத்ததாக இவரின் 'சர்பத்' வெளியாக உள்ளது. நல்ல கதைகளை தெளிவாக தேர்வு செய்து, அதில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வரும் கதிர் நிச்சயம் ஒருஉயர்வான உயரத்தை அடைவார்.


Click it and Unblock the Notifications











