»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தை வைத்து அய்யா என்ற படத்தை விரைவில் இயக்கவுள்ளதாக சாமி படஇயக்குநர் ஹரி அறிவித்துள்ளார்.

விக்ரமை வைத்து சாமி படத்தை இயக்கிய ஹரி, தற்போது சிலம்பரசனை வைத்து கோவில் என்றபடத்தை நாகர்கோவிலில் இயக்கி வருகிறார்.

படத்தின் முக்கால்வாசிப் படப்பிடிப்புநாகர்கோவிலில்தான் நடைபெறுகிறது.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் ஹரி பேசுகையில், கோவில் படம் நாகர்கோவிலைமையமாகக் கொண்டது.

இதில் சிலம்பரசன் ஒரு ப்ாடலைப் பாடியுள்ளார். அவருக்கு ஜோடியாகசோனியா அகர்வால் நடிக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அய்யா என்ற படத்தை இயக்கவுள்ளேன்.

இதுதொடர்பானஅறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

Please Wait while comments are loading...