ரசிகர்களை பிடிக்கலைனு அஜித் சொல்லிட்டாரு.. கலாய்த்த பிரபலம்.. விழுந்து விழுந்து சிரித்த தெலுங்கு நடிகர்
சென்னை: நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர். இன்னும் சொல்லப்போனால் திரைத்துறையில் பலராலும் பாராட்டப்பட்ட தைரியமான அதேநேரத்தில் நேர்மையான நடிகர். இப்படி இருக்கும்போது இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே தனது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது அடுத்த படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வருகிறது. அப்படி இருக்கையில் அவரை பிரபல ஃபுட் ரிவ்யூவர் இர்ஃபான் தனது சமீபத்திய வீடியோ ஒன்றில் கலாய்த்துள்ளார்.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். அஜித்தின் அடுத்த படத்தையும் அவர்தான் இயக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அஜித் கடந்த ஓராண்டுக்கு மேலாக அவரது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டு எப்படியாவது அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டும் அஜித் கார் ரேஸில் தான் கவனம் செலுத்த உள்ளார் என அவரது அஜித்குமார் ரேசிங் அணியின் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த படம்: அதே நேரத்தில் அஜித் குமார் தற்போது தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அவரது கார் ரேஸ் தொடர்பான ஆவணப்படத்தை மையமாகக் கொண்டு அதில் திரைப்படத்திற்கு ஏற்ற திரைக்கதையை அமைத்து திரைப்படம் ஒன்றை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி உள்ளார் என்று தகவல்கள் வெளியானது. மேலும் இந்த ஆவண திரைப்படம் வரும் மே மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அக்கறை கொண்ட அஜித்: அஜித் எப்போதுமே தனது ரசிகர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட நபராகவே இருக்கிறார். தனது ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு தனது ரசிகர்களை நோக்கி, படிப்பவர்கள் நன்றாக படியுங்கள், வேலைக்கு செல்பவர்கள் இன்னும் நன்றாக வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள், அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள், உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது படத்தை வந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் இதுபோல் எந்த நடிகரும் கூறியது இல்லை.

கலாய்: அஜித்தின் இந்த குணத்திற்காகவே அஜித் ரசிகர்கள் அவரை மேலும் மேலும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் ஃபுட் ரிவியூவர் இர்ஃபான் அண்மையில் நடிகர் ராணாவை பேட்டி எடுத்தார். அப்போது அவர் நான் அஜித் ரசிகன், எனக்கு அஜித் ரொம்ப பிடிக்கும், ஆனால் அவருக்கு தான் எங்களை பிடிக்காது என்று சொல்லிவிட்டார். அதனால் நாங்கள் கட்சி மாறிவிட்டோம். ஆனாலும் ஒன் - சைடு காதல் மாதிரி போய்க்கொண்டு உள்ளது கலாய்த்து விட்டார். இவரது இந்த பேச்சைக் கேட்ட ராணா உடனே விழுந்து விழுந்து சிரித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











