துடிதுடித்து இறந்தாரா நடிகர் ராஜேஷ்? வலியை தராதீங்க... மகள் கண்ணீர் பேட்டி!

சென்னை: பிரபல நடிகரான ராஜேஷ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் காலமானார். அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ராஜேஷின் மரணம் குறித்து யூடியூபில் வரும் செய்திகள் மன வேதனை அளிப்பதாக அவரது மகள் கண்ணீர் விட்டு பேட்டி அளித்துள்ளார்.

கே. பாலச்சந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் சினிமாவில் அறிமுகமான ராஜேஷ்,
'கன்னிப் பருவத்திலே' படத்தின் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து, அந்த ஏழு நாட்கள், தாய்வீடு, சிறை, சத்யா, ஜெய்ஹிந்த், ரமணா, தர்மதுரை என 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஜோன் சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜேஷின் மனைவி ஜோன் சில்வியா தனது 49வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்களுக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர்.

Rajesh divya Deepak
Photo Credit:

மேலும் காயப்படுத்தாதீர்கள்: நடிகர் ராஜேஷ் அவர்களின் மரணம் ஒட்டுமொத்த திரை துறையினரையும் உலுக்கிய நிலையில், திரை பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள், வெள்ளித்திரை நடிகர்கள் என பலரும் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அவரது உடல் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நக்கீரன் youtube சேனலுக்கு நடிகை வடிவுக்கரசி மற்றும் ராஜேஷ் அவர்களின் மகள் திவ்யா இருவரும் பேசி உள்ளனர். அதில் பேசிய நடிகை வடிவுக்கரசி, நீங்கள் அனைவரும் ராஜேஷ் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மிகவும் சிறப்பு படுத்தி விட்டீர்கள். எந்த ஒரு நல்ல விஷயமும், அனைவருக்கும் போய் சேர வேண்டும் என நினைக்கிற ஒரு நல்ல உள்ளம், அவர் நல்ல மனிதர், அந்த மனிதருக்கு இவ்வளவு பெரிய அளவில் பலர் மரியாதை செலுத்தியதை பார்க்கும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது.

துடிதுடித்து இறந்தாரா: இதை நினைத்து பார்க்கும்போது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சில youtube சேனல்களில் வரும் பேட்டியை பார்க்கும்போது மனம் வேதனை அடைகிறது. அவர் மர்மமான முறையில் இறந்தார், அவருக்கு அந்த நோய் இருந்தது, துடிதுடித்து இறந்தார் என பலரும் செய்திகளை வெளியிடுகிறார்கள். அவர் தன்னுடைய உடலை எப்படி பார்த்துக் கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும், பல youtube சேனல்களில் உடல்நலம் குறித்து அவரே பேசி இருக்கிறார். அருகில் இருந்து பார்த்தது போல துடிதுடித்து இறந்தார் என்று சொல்வதில் நியாயமே இல்லை. அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் நன்றாக வாழ வேண்டும். மகளுக்கு திருமணம் செய்திருக்கிறார். மகனுக்கான திருமண ஏற்பாடுகளை செய்துவிட்டு அனைத்து கடமைகளையும் முடிந்த பிறகு தான் அவர் இறந்து இருக்கிறார். அந்த திருமணம் சிறப்பாக நடக்க நாழ் வாழ்த்த வேண்டும். இறந்தவர் பற்றி தயவு செய்து தெரியாத செய்திகளை பேசி குடும்பத்தில் இருப்பவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய ராஜேஷின் மகள் திவ்யா, அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு அனைவரும் வந்ததற்கு நன்றி. அப்பாவை பற்றி பேச நிறைய நல்ல விஷயம் இருக்கிறது. அதை பேசுகள், அவரின் இறப்பு பற்றி தப்பு தப்பாக பேசுவதை கேட்கும் போது வேதனையாக இருக்கிறது. தயவு செய்து அப்பா பேசாதீர்கள் என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X