பல வெற்றிப்படங்கள்... பெயர் எடுத்த ஹிட் இயக்குனர்.. கே.எஸ்.ரவிக்குமாருடன் சந்திப்பு
Recommended Video
சென்னை : பல ஹிட் படங்களை முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி கமர்சியல் ஹிட் பல கொடுத்த இயக்குனர் தான் கே.எஸ்.ரவிக்குமார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டாப் ஹீரோக்களை வைத்து இயக்கியவர்.
இவர் நம் பிலிமி பிட் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

லிங்கா தீர்ப்பு குறித்து
ஒரு ஆறு வருடம் கழித்து ஒரு வெற்றிகரமான தீர்ப்பு. நாங்கள் முறைப்படி கதையை பெற்று தான் படமாக எடுத்தோம்.பொன் குமரனுடைய கதை அது. படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியவர்கள் தான் தோல்வி என்று கூறி வருகின்றனர். படம் சுமார் 180 கோடி வசூலித்ததாக தயாரிப்பாளர் கூறி விட்டார்.

லிங்கா படத்தை இப்போதும் கூட பலரும் என்னை பார்க்கும் பொழுது சூப்பர் என்று கூறுகின்றனர். ஆனால் அதில் என்ன குறை இருக்கிறது என்று எனக்கும் தெரியும். க்ளைமாகஸ் ஒரு குறையாகிவிட்டது எடுக்கும் போது அப்படி எடுக்கப்பட்டு வேறு வழியின்றி ரீலிஸ் செய்யப்பட்டது.
உங்கள் இத்தனை படங்களில் இது போன்ற ஒரு வழக்கை ஏதிர் கொன்டது உண்டா?
இல்லை லிங்கா படத்தில் மட்டுமே ஏதிர் கொன்டேன். இதுவரை என் படங்களில் கோச்சடையான் என்னுடைய கதை திரைக்கதை இயக்கம் வேறு ஒருவர் மற்றும் மற்ற படங்கள் நான் தான் பல கதைகளை எடுத்து முழு திரைக்கதை நான் தான் இயற்றினேன் என்று கூறினார்.

ரஜினி,கமல் மற்றும் அஜித் உடன் அடுத்த படம் ?
எனக்கும் ஆசைதான் இவர்களுடன் படம் இயக்க ஆனால் அவர்களுக்கும் அந்த ஆசை இருக்கனும். நான் சென்று கேட்க மாட்டேன் நான் சற்று வெட்கப்படுவேன். மேலும் அவர்கள் தான் சொல்ல வேண்டும் ரவிக்குமார்க்கு கொடுக்க வேண்டும் என்று. நான் யாருக்கும் விரோதி அல்ல எப்பொழுதும் எல்லோரும் எனக்கு நண்பர்கள் தான் என கூறினார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
இரண்டு நண்பர்களுக்கு சொல்ல விரும்புவது
இரண்டு பேரும் அரசியலுக்கு வருவதற்கு என் வாழ்த்துக்கள். இருவரும் நல்லவர்கள் மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறவர்கள். இருவர் வந்தால் ஏதாவது செய்வார்கள். ஆனால் கூட்டாக வரப்போகிறார்களா தனி தனியாக வரப்போகிறார்களா அல்ல கூட்டணியா வரப்போகிறார்களா ஆண்டவன் கையில் தான் இருக்கு.


Click it and Unblock the Notifications











