இமான் அண்ணாச்சியின் ஒரே மகள் ஜெபியின் கலகல பேட்டி.. ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்னு கூடிட்டாங்கய்யா!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 ஆரம்பித்து அமோகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது உறவினர்களை பேட்டி எடுத்து பிரத்யேகமாக கொடுத்து வருகிறது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்.
நமிதா மாரிமுத்துவை வளர்த்த சுதா மம்மியின் பேட்டியை தொடர்ந்து இமான் அண்ணாச்சியின் செல்ல மகள் ஜெபி மற்றும் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் சொந்தங்களுடன் எடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.
இமான் அண்ணாச்சியை பற்றி ஏகப்பட்ட விஷயங்களை அவருடைய அன்பு மகள் ஜெபி நமக்காக ஷேர் செய்துள்ளார்.

இமான் அண்ணாச்சி
சன் டிவியில் சுட்டிக் குட்டீஸ், சொல்லுங்கண்ணே சொல்லுங்க என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. அவர் இந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், அவரெல்லாம் எங்கே இருந்து வரப் போகிறார் என நினைத்தவர்கள் நினைப்பை பொய்யாக்கும்படி அசத்தல் என்ட்ரி கொடுத்தார் இமான் அண்ணாச்சி.
இந்த சீசன் காமெடியன்
ஒவ்வொரு சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சில காமெடி நடிகர்கள் போட்டியில் கலந்து கொள்வார்கள். அதே போல இந்த சீசனில் ரசிகர்களை கலகலப்பாக வைத்திருக்க இமான் அண்ணாச்சி போட்டியாளராக பங்கேற்றுள்ளார். மேலும், காமெடியன் ஒருவர் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல வேண்டும் என்கிற தனது ஆசையையும் பிக் பாஸ் வீட்டில் கூறியுள்ளார்.

மகள் ஜெபி
இமானுவேல் எனும் இமான் அண்ணாச்சியின் மகள் ஜெபி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், இமான் அண்ணாச்சியின் கேரக்டர் எப்படி அவர் எதற்கெல்லாம் கோபப்படுவார்? சண்டை போடுவாரா? மாட்டாரா? உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்களை கூறியுள்ளார்.

எதுக்கு கோபப்படுவார்
அப்பா பொதுவாக எதுக்குமே கோபப்பட மாட்டார். நான் சரியா படிக்கலைன்னா கூட கண்டுக்க மாட்டார். புடிச்சா படிக்கப் போறான்னு விட்டுடுவார். ஆனால், பொய் சொன்னால் அவருக்கு நிச்சயம் கோபம் வந்துவிடும். இதுவரை பிக் பாஸ் வீட்டில் பெரியதாக சண்டை ஏதும் இல்லை போக போக பார்க்கணும் என அழகாக அண்ணாச்சி மகள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

யாரை பிடிக்கும்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் மொத்தம் 18 பேர்கள் இதுவரை கலந்து கொண்டுள்ள நிலையில், அப்பாவை தவிர உங்களுக்கு யாரை பிடிக்கும்? யார் டைட்டில் வின் பண்ணுவார்கள் என நினைக்கிறீங்க? உள்ளிட்ட கேள்விகள் முன் வைத்தபோது ரொம்ப உஷாராக தனது அப்பாவுக்கு சாதகமாகவே அவர் சொல்லி உள்ள பதிலை பேட்டி வீடியோவில் கண்டு ரசியுங்கள்.

இமான் அண்ணாச்சி குடும்பம்
இமான் அண்ணாச்சியின் மகள், மனைவி, உறவினர்கள் என அனைவரும் பேட்டியின் கடைசியில் தலை காட்டி இமான் அண்ணாச்சி இந்த சீசனில் 100 நாட்கள் வரை இருந்து டைட்டிலை வென்று வர வேண்டும் என All The Best சொல்லியுள்ள பேட்டியை மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!


Click it and Unblock the Notifications











