இரண்டாவது கல்யாணம் பண்ணும் போது.. நானே சொல்வேன்.. சோனியா அகர்வால் செம பேட்டி!

சென்னை: சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? என அந்த விளம்பரம் பரபரப்பை கிளப்பிய நிலையில், சொந்த தொழிலுக்கான விளம்பரம் என்பதை ரிவீல் செய்து இருந்தார்.

அது குறித்து முழு விபரங்களை நமது தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் சோனியா அகர்வால் பல விசயங்களை மனம் திறந்துள்ளார்.

Hot Interview: Sonia Agarwal says I’ll the first to person to announce my second marriage!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அவர், செல்வராகவனையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால், அவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் தொடரவில்லை. இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டனர்.

கடந்த ஆண்டு அருண் விஜய்க்கு அம்மாவாக தடம் படத்தில் நடித்திருந்தார். அதே நேரத்தில், அவர் சோலோ ஹீரோயினாக நடித்த தனிமை படமும் வெளியாகி இருந்தது.

சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வராத நிலையில், சொந்த தொழில் ஆரம்பிக்க நினைத்த சோனியா அகர்வால், திருமணம் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை சிலருடன் இணைந்து தொடங்கியுள்ளார். சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தை இயக்கியுள்ள ஆனந்த் பால்கி, ஃபேஷன் டிசைனர் ஷிட்னி, 'சமையல் சமையல்' வெங்கடேஷ் பட், பிரியா ஆகியோருடன் இணைந்து இதைத் தொடங்கி உள்ளார். இது தொடர்பான பல சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

மேலும், தனக்கு மறுமணம் நடந்தால், மீடியாக்களில் கிசுகிசுக்கள் பரவுவதற்கு முன்னதாக, தானே முதல் ஆளா வந்து அறிவிப்பேன் என்றும் போல்டாக கூறியுள்ள ஹாட் பேட்டியை காணத் தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X