விஜய்யின் அரசியல் குறித்து நச் கருத்து.. ஹாட் ஸ்பாட் டூ மச் இயக்குநர் இப்படி போட்டு உடைச்சிட்டாரே
சென்னை: இயக்குநர் மற்றும் நடிகரான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வெளியான படமான ஹாட் ஸ்பாட் டூ மச் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை எழுப்பினாலும், படம் வணிக ரீதியாக வெற்றியை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் நடிகர் விஜய் குறித்தும் அவரது அரசியல் குறித்தும் பேசியுள்ளார்.
அவரது பேட்டியில், " நான் விஜய்யின் தீவிர ரசிகர். சினிமாவில் நான் அவரைப் பார்த்து பார்த்து ரசித்துள்ளேன். அஜித்தா? விஜய்யா? என்று வரும்போது நான் விஜய்காக நண்பர்களுடன் சண்டை போட்டுள்ளேன். இதனால் எனது நண்பர்களுடன் பல மாதங்கள் எல்லாம் பேசாமல் இருந்துள்ளேன். இப்படி இருக்கையில், நான் அவரை திரையில் பார்த்து ரசித்துள்ளேன்.
ஓட்டு?: அதற்காக நான் விஜய்க்கு ஓட்டு போடுவேனா என்றால், அது முற்றிலும் வேறான விஷயம். சினிமா வேறு அரசியல் வேறு. அதற்காக நான் அவருக்கு ஓட்டு போட மாட்டேன் என்று சொல்லவில்லை. நான் விஜய்யின் ரசிகர் தான், ஆனால் அது எந்த அளவுக்கு என்று ஒன்று உள்ளது தானே. எனது படத்தில் கூட ரசிகர்கள் தங்களது வாழ்க்கையை சீரழித்து விட்டு, அபிமான நடிகர்களுக்காக செய்யும் விஷயங்களைத்தான் நான் தவறு என்று கூறுகிறேன். இது மட்டும் இல்லாமல், நான் சொன்ன கருத்தை முதன்மையான நடிகர்களிடம் கேட்டால் கூட அவர்களும் ஒத்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

மிரட்டல்: இவரைப் பேட்டி எடுத்த நடிகரும் பலகுரல் கலைஞருமான ஆதவன் தொடர்ந்து பேசுகையில், " நான் ஒரு நடிகருக்கு எதிராகத்தான் பேசி வருகிறேன். கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறேன். இதனால் சிலர் என்னிடத்தில் என்னங்க அந்த நடிகரைப் பற்றி இப்படி எல்லாம் பேசறீங்க, நீங்கள் இந்த சினிமா துறையில் இருக்கனுமா வேண்டாமா? இப்படி எல்லாம் பேசினால் உங்களுக்கு யார் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று எல்லாம் கேள்வி கேட்டு வெளிப்படையாக மிரட்டுகிறார்கள். நான் அவர்களிடத்தில் நான் 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கிறேன், எனக்கு உங்க நடிகரா சோறு போடுகிறார் என்று பதில் அளித்துள்ளேன் என்றும் கூறினார். அவர் இவ்வாறு கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











