twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவர் ஜமுனாவாக மாறியது எப்படி? விளக்கம் தருகிறார் தயாரிப்பாளர் எஸ்.பி.சவுத்ரி!

    |

    சென்னை: 18 ரீலிஸ் எஸ்.பி.சவுத்ரி தயாரிப்பில், வத்திக்குச்சி பட இயக்குநர் கின்ஸ்லின் இயக்கக்கத்தில் உருவாகியுள்ள படம் டிரைவர் ஜமுனா.

    த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படமானது நவம்பர் 11ம் தேதி வெளிவருகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.சவுத்ரி நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

    வண்டி ஓட்டும் போது டயலாக் பேசினா நல்லா இருக்காது.. டிரைவர் ஜமுனா இயக்குநர் சொன்ன டாப் சீக்ரெட்!வண்டி ஓட்டும் போது டயலாக் பேசினா நல்லா இருக்காது.. டிரைவர் ஜமுனா இயக்குநர் சொன்ன டாப் சீக்ரெட்!

    நான் வத்திக்குச்சி ரசிகன்

    நான் வத்திக்குச்சி ரசிகன்

    கேள்வி: தயாரிப்பாளர் சவுத்ரி, இப்படத்தில் நடிக்க நீங்கள் ஏன் ஐஸ்வர்யா ராஜேஷை தேர்வு செய்தீர்கள்?

    பதில்: வத்திக்குச்சி படத்திற்கு நான் ரசிகன். படம் தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் எந்தெந்த இயக்குநர்களை வைத்து படம் தயாரிக்கலாம் என்று அட்டவணையிட்டோம். எனக்கு முதலில் தோன்றியது கின்ஸ்ன்லி தான். அவரை அழைத்து கதை கேட்டோம். ஒரு மதியம் வந்து கதை கூறினார். உடனே கதை பிடித்து விட்டது. அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி படம் வெளியானது. இந்த கதைக்கு கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கலாம் என்று கருதினோம். மேலும் ஜஸ்வர்யா ராஜேஷின் க/பெ ரணசிங்கம் படத்தின் டிரைலரை பார்த்தோம். நம் கதைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் தான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரை நடிக்க வைத்தோம் என்றார்.

    100 சதவீதம் உழைப்பு

    100 சதவீதம் உழைப்பு

    கேள்வி: இசையமைப்பாளர் ஜிப்ரான் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: ஒரு இயக்குநர் நம்மிடம் கதை கூறும்பொழுது, கூறிய கதையில் 70% சதவீதம் திரையில் வந்தாலே போதுமானது. ஆனால் படத்தை திரையில் பார்க்கும்பொழுது 80 சதவீதம் வந்துள்ளது. மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் 100% தனது நடிப்பை கொடுத்துள்ளார். இந்தப்படம் நன்றாக வருவதற்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர் ஜிப்ரான் என்றார்.

    அவரும் தயாரிப்பு கம்பெனி வைத்துள்ளார்

    அவரும் தயாரிப்பு கம்பெனி வைத்துள்ளார்

    கேள்வி: கேமராமேன் கோகுல் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: மான்ஸ்டர், மாயாவி, வத்திச்குச்சி போன்ற படங்களில் பணியாற்றியவர் கேமராமேன் கோகுல். இப்படத்தில் பணிபுரிவதற்காக அவரை அழைத்து ஊதியம் தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் முழு கதையை கேட்டு விட்டு, படத்தின் பட்ஜெட் எவ்வளவு? குறிப்பிட்ட அளவு லாபம் வைத்துக் கொண்டு படத்தை என்னிடம் தந்து விடுங்கள். கதை நன்றாக உள்ளது என்று கூறினார். ஏனென்றால் அவரும் ஒரு தயாரிப்பு கம்பெனி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ரொம்ப பொறுமையானவர் மற்றும் சின்சியரானவர் என்றார்.

    ராஜேஷ் குமார் நாவல்

    கேள்வி: படத்தின் வெற்றி யார் கையில் உள்ளது?

    பதில்: ஒரு படத்தின் வெற்றி என்பது கதை எழுதுபவரின் கையில் மட்டும் கிடையாது. அந்த கதையை நல்லதொரு தயாரிப்பு கம்பெனி ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த படத்திற்கு தயாரிப்பாளர் சௌத்ரி முதலில் ஏற்றுக் கொண்டார். ஏனெனில் பொதுவாக அவருக்கு ராஜேஷ் குமார் நாவல் படிப்பதில் ரொம்ப விருப்பம். இந்த கதை விறுவிறுப்பாக, த்ரில்லாகவும் செல்வது அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. படம் தயாரிப்பதை ஒரு வணிகமாக பார்க்காமல் எமோஷனல் கலந்து அவர் பார்த்தது உண்மையில் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இதற்கு அடுத்தப்படியாக படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், டெக்னீஷியன், கேமராமேன் ஆகியோரின் கூட்டுமுயற்சி முக்கியம் என்றார்.

    இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/PTlUNEcoIcQ இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    18 Releases Driver Jamuna is produced by S.P. Chaudhary and directed by Vathikuchi director Kinslin. Actress Aishwarya Rajesh has acted in this thriller film. The film is releasing on November 11. In this case, the producer of the film, S.B. Chaudhary gave a special interview to our filmibeat channel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X