twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு புது உடையால் ஹீரோயின் ஆன சுஹாசினி: இப்படியும் நடந்திருக்கு

    By Siva
    |

    சென்னை: படப்பிடிப்புக்கு புத்தாடை அணிந்து சென்றதால் ஹீரோயின் ஆகும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் சுஹாசினி மணிரத்னம்.

    சுஹாசினி மணிரத்னம் திரைக்கு பின்னால் இருக்க ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்து நடிகையாகிவிட்டார். இந்நிலையில் தனது திரையுலக வாழ்க்கை குறித்து அவர் மனோபாலாவின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

    வங்கி அதிகாரி

    வங்கி அதிகாரி

    கல்லூரி நாட்களில் நான் வங்கியில் பெரிய அதிகாரியாக இருப்பேன், எனக்கு கீழ் 30 ஆண்கள் வேலை பார்ப்பார்கள். அவர்களை தாட், பூட் என்று விரட்டலாம் என்பதே என் எதிர்கால திட்டமாக இருந்தது. நான் சினிமாவுக்கு வருவேன் என்று எதிர்பார்த்ததே இல்லை. படத்தில் வேலை செய்யும்போது 200 பேருக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கும்போது இதை விட வங்கியில் 30 பேரை பரவாயில்லை என்று தோன்றியது உண்டு.

    வாழ்க்கை

    வாழ்க்கை

    என் அப்பா, அம்மாவுக்கு முன்பே நான் சென்னைக்கு வந்துவிட்டேன். பாட்டி ராஜலட்சுமி, கமலுடன் தங்கினேன். அந்த ஓராண்டில் தான் என் வாழ்க்கையே மாறிவிட்டது. என் பாட்டி எனக்கு ரொம்ப சுதந்திரம் கொடுத்தார். கமல் என்னை ப்ராசசிங், மிக்ஸிங், பாடல் பதிவு, டப்பிங்கிற்கு அழைத்து சென்றார். அப்படியே தடம் மாறிப் போச்சு.

    நடிப்பு

    நடிப்பு

    என் முதல் படத்தின்போது நடிப்பு எல்லாம் நல்லா வந்தது. சுஹாசினி என்றால் நல்லா சிரிப்பாங்கன்னு சொல்வாங்க. ஆனால் அந்த படத்தில் சிரிப்பு தான் ரொம்ப கேவலம். எனக்கு சிரிப்பே வரவில்லை. சோமசுந்தரேஸ்வர், கண்ணன், பிரகதீஷ் ஆகிய மூன்று பேர் என்னென்னமோ செய்து பார்த்தார்கள், சிரிப்பே வரவில்லை. டப்பிங் தியேட்டரில் மூன்றாம் பிறையில் கமல் பண்ணுவது போன்று பண்ண பிறகு தான் முதல் முறையாக சிரித்தேன்.

    அசோக் குமார்

    அசோக் குமார்

    அசோக் குமார் இல்லை என்பது வருத்தமான விஷயம். அவருக்குன்னு தமிழ் பட டைட்டில் வாய்க்கும். அவருக்கு வாயிலேயே நுழையாது. நான் சென்னைக்கு வந்தபோது இயற்பியல் படித்தேன். கமல் தான் என் மனதை மாற்றி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்த்துவிட்டார். எனக்குள் ஏதோ ஸ்பார்க் இருக்கிறது என்று அவருக்கு தோன்றியது. என் அப்பா, அம்மாவுடன் சண்டை போட்டுத் தான் என்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்த்தார் கமல். எனக்கு ஸ்கூல், காலேஜ் பீஸ் கட்டியது அவர் தான்.

    உதிரிப் பூக்கள்

    உதிரிப் பூக்கள்

    நான் படித்துக் கொண்டிருந்தபோது மகேந்திரன் சார் என் அப்பாவை உதிரிப்பூக்கள் படத்தில் நடிக்க வைத்தார். அப்பா என்னை தன்னுடன் ஷூட்டிங்கிற்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது அசோக் குமார் சார் என்னை பார்த்து என்ன செய்கிறாய் என்று கேட்க ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் முதலாமாண்டு படிக்கிறேன் என்றேன். சரி என்னுடன் வந்து லைட்டிங் பண்ணு என்றார். நானும் அவரிடம் உதவியாளராக சேர்ந்தேன். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஷூட்டிங் நடந்தது. நான் ஃபுல்லா உதவியாளராக வேலை செய்தது ஜானி படம். அந்த படத்தில் வேலை செய்தது அழகான நினைவுகள்.

    புகைப்படம்

    புகைப்படம்

    நினைத்தாலே இனிக்கும், உல்லாசப் பறவைகள் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டு எனக்கு ஜீன்ஸ் உடை வாங்கிவிட்டு வாந்தாங்க. அந்த உடையை அணிந்து கொண்டு நான் படப்பிடிப்பிற்கு சென்றேன். ரவி வந்து 2, 3 ஸ்டில்ஸ் எடுத்தார். நானும் மாடல் மாதிரி போஸ் கொடுத்தேன். அதை மகேந்திரன் சார் பார்த்துவிட்டு அசோக் குமாரிடம் சொல்லி இந்த படத்திற்கு இந்த பொண்ணு ஹீரோயினாக வரும்னு நினைக்கிறேன். ஆனால் அண்ணன், கமல், இந்த பொண்ணு ஒத்துக்குமா என்று தெரியவில்லை. ஃபர்ஸ்ட் சரியாக இருக்குமா என்று போட்டோ எடுத்துப் பார்த்துவிடலாம் என்று எனக்கு தெரியாமலேயே நான் லைட் பண்ணும்போது எல்லாம் போட்டோ எடுத்திருக்கிறார்கள். அன்றே டெவலப் செய்து பார்த்துவிட்டார்கள்.

    உதவியாளர்

    உதவியாளர்

    உங்க உதவியாளர் தானே நீங்களே சம்மதிக்க வையுங்கள் என்று மகேந்திரன் சார் அசோக் குமாரிடம் கூற அவர் எங்க வீட்டிற்கு வந்தார். காரில் ஏறச் சொல்லிவிட்டு புதுப்படத்திற்கு லைட்டிங் ஸ்கீம் டிஸ்கஸ் பண்ண வேண்டும். உட்லாண்ட்ஸ் ட்ரைவ் இனில் போய் பண்ணலாம் என்றார். முதலில் ஐஸ்கீரம் வாங்கிக் கொடுத்தார். நம்ம படத்திற்கு ஹீரோயின் கிடைக்கவில்லை என்றார். நம் பட ஹீரோயின் நீ தான் என்று ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னிடம் கூறினார். உடனே நான் கோபித்துக் கொண்டேன்.

    ஐஸ்கிரீம்

    ஐஸ்கிரீம்

    அசோக் குமார் இன்னொரு ஐஸ்கிரீமை கொடுத்து நீ ஒன்னும் பெரிய கிளியோபாட்ரா இல்லை என்று எனக்கு தெரியும். நீ பிரமாதமா நடிக்க மாட்டாய் என்றும் தெரியும். ஆனால் எனக்கு இப்படி ஒரு பொறுப்பை கொடுத்திட்டாங்க. என் தலையெழுத்து நான் லைட்டிங் பண்ணுவேனா, உன்னை சமாதானம் செய்வேனா, இந்தா ஐஸ்கிரீமை சாப்பிடு என்றார். சரி, ஒரு தடவை தான் நடிப்பேன் என்றேன். ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பேன், மேக்கப் போட மாட்டேன், காதல் காட்சியில் நடிக்க மாட்டேன், காலில் விழும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்றேன். அதற்கு அவர் சரி என்றார் என சுஹாசினி தெரிவித்துள்ளார்.

    English summary
    Suhasini Maniratnam has explained in detail as to how did she end up as an actress.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X