twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பந்தய புறாக்கள், சினிமா, புத்தகங்கள், காய்கறிகடை.. லாக்டவுனில் இயக்குனர் வெற்றிமாறனின் ஒரு நாள்!

    By
    |

    சென்னை: இயக்குனர் வெற்றிமாறன், இந்த லாக்டவுன் நேரத்தை எப்படி செலவிடுகிறார் என்பதைச் சொன்னார்.

    சீனாவின் வுஹானில் உருவான கொரோனாவைரஸ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.

    மொத்த நாடுகளையும் பிரித்து மேய்ந்திருக்கிறது, இந்த வைரஸ். அமெரிக்கா இதன் பாதிப்பில் சிக்கித் தவிக்கிறது.

    முழுசா ஆபாச பட நடிகையாக மாறிய பிரபல ஹீரோயின்.. தயவு செஞ்சு அவரு இன்ஸ்டா பக்கம் போயிடாதீங்க!முழுசா ஆபாச பட நடிகையாக மாறிய பிரபல ஹீரோயின்.. தயவு செஞ்சு அவரு இன்ஸ்டா பக்கம் போயிடாதீங்க!

    மருத்துவ நிபுணர்கள்

    மருத்துவ நிபுணர்கள்

    இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் கொரோனாவுக்கு எதிராகக் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றன. இதைக் கட்டுக்குள் கொண்டு வர மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இந்த தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    நடிகர், நடிகைகள்

    நடிகர், நடிகைகள்

    அதை கட்டுப்படுத்தும் வகையில் மாதம் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்கும் முடங்கி கிடக்கின்றனர். ஷூட்டிங் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளும் வீடுகளுக்குள் இருக்கின்றனர். அவர்களில் சிலர், தினமும் ஏதாவது வீடியோ, போட்டோ என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    வெற்றிமாறன்

    வெற்றிமாறன்

    இந்நிலையில், இந்த கொரோனாவால் பல படங்களின் ஷுட்டிங்களும் தடைபட்டுள்ளன. இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கை, இந்த மாதம் வெளிநாட்டில் தொடங்க இருந்தார். கொரோனாவால் அது முடியாமல் போயிருக்கிறது. இதற்கிடையே, இந்த கொரொனா நேரத்தில், வெற்றிமாறன் வீட்டில் என்ன செய்கிறார் என்று கேட்டோம்.

    பந்தயப் புறாக்கள்

    பந்தயப் புறாக்கள்

    'இந்த நேரத்தை நல்ல விதமா பயன்படுத்த நினைக்கிறேன். அதனால, இதுவரை நான் பார்க்காத பல படங்களை தேடித் தேடி பார்க்கிறேன். வாசிக்காத பல புத்தகங்கள் இருக்கு. அதை வாசிக்கிறதுக்கான நேரமா இதைப் பயன்படுத்திக்கிறேன். இதுக்கு இடையில பந்தய புறாக்கள் வளர்க்கிறேன்.

    காய்கறிகள்

    காய்கறிகள்

    சமீபத்துல நடந்த போட்டியில நாங்கதான் சாம்பியன். அடுத்த வருடப் போட்டிக்காக அந்த புறாக்களை பரமாரிக்கிறேன். வாரத்துல ஒரு நாள், வீட்டுக்காக காய்கறிகள் வாங்க கடைகளுக்குப் போறேன். மூனு மணி நேரம் அங்க செலவழிக்கிறேன். குடும்பத்தோடயும் இப்ப அதிகமாக நேரத்தை ஸ்பென்ட் பண்ண முடியுது' என்கிறார்.

    சூரி நடிக்கும் படம்

    சூரி நடிக்கும் படம்

    அடுத்த படம் பற்றி கேட்டபோது, 'சூரி நடிக்கிற படம்தான். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இதுக்குப் பிறகு சூர்யா நடிக்கிற படத்தை இயக்கறேன். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்' என்றார். வெற்றிமாறன் இயக்கி கடந்த வருடம் வெளியான, அசுரன் சூப்பர் ஹிட்டானது. இதில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்ராஜ் இசை அமைத்திருந்தார்.

    English summary
    Film industry has been devastated with the outbreak of coronavirus. Filmmaker Vetrimaaran use this lockdown time for reading and watching movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X