13 வயதில் பாட ஆரம்பிச்ச பாப் ஷாலினி...சூர்யா ஜோதிகா காதலுக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம் ?

சென்னை: எனக்கு திரைபடத்தில் பாடும் வாய்ப்பை முதலில் வழங்கியவர் இயக்குனர் பாலச்சந்தர் என்று பாப் பாடகி ஷாலினி தெரிவித்தார்.

Recommended Video

Singer Pop Shalini Exclusive | இதுவரைக்கும் 5000 Songs பாடியாச்சு | Filmibeat Tamil

தற்போது ஆங்கிலம் கலந்த பாடலை நடிகை ஆன்ட்ரியா நன்றாக பாடுவதாகவும், நடிப்பது ரொம்ப கஷ்டம் என்றும் கூறினார்.

எனது 25 வருட பயணத்தில் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளேன் என்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றும் பெருமிதம் கொண்டார். பில்மிபீட் தமிழுக்காக பிரத்தியேக பேட்டி கொடுத்ததை இங்கு நாம் பார்ப்போம்.

பாப் பாடகி பட்டம்

பாப் பாடகி பட்டம்

கேள்வி: பாப்பாடகி என்ற பட்டம் உங்களுக்கு எப்படி கிடைத்தது?

பதில்: என்னுடைய 13வயதில், அதாவது 1996ம் ஆண்டு தமிழில் ஒரு ஆல்பம் பாடல் பாடியிருந்தேன். அந்த வருடம் நடிகை ஷாலினியும் நடிக்க வந்தார்கள். எங்கள் இருவரையும் வேறுபடுத்துவதற்காக மக்கள் என்னை அன்பாக பாப்பாடகி ஷாலினி என்று அழைக்க ஆரம்பித்தார்கள் .பாப் ஷாலினி என்றால் நான் மட்டும் தான் என்று சிரித்தபடி சொல்லி இந்த பெயருக்கு நான் தான் காப்பி ரைட்ஸ் வெச்சுருக்கேன் என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் .

இறைவனுக்கு நன்றி

இறைவனுக்கு நன்றி

கேள்வி: 25 வருட இசைப்பயணம் குறித்து...

பதில்: 25 வருட பயணத்தில் 14 மொழிகளில் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளேன் என்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. 15 வயதில் எனது முதல் திரைப்பட பாடலை பாடினேன். அப்போது யாருக்கும் கிடைக்காத சான்ஸ் எனக்கு கிடைத்தது. அந்த காலகட்டத்தில் தனியாக மியூசிக் செய்யக்கூடிய அளவுக்கு வளர்ந்தேன். எனக்கு அருமையான வாழ்க்கையை அமைத்து கொடுத்த இறைவனுக்கு நன்றி. நான் பாடிய பாடல்கள் குறித்து எனது அம்மா எழுதி வைத்துள்ளார்கள். தற்போது கூட ஒரு சில தளங்களில் பாடல்கள் ஒலிக்கும்போது, பாடியவர் பாப்பாடகி ஷாலினி என்று வரும்பொழுது, அப்போது தான் எனக்கு தெரியும் நான் பாடியது என்று. ஏனெனில் அந்த காலகட்டங்களில் எனக்கு மொழி தெரியாததால், படத்தின் பெயரும் தெரியாமல் இருந்தது.

இந்தியாவின் கலாச்சாரம்

இந்தியாவின் கலாச்சாரம்

கேள்வி: நீங்கள் குழந்தைகளுக்காக நிறைய ஆல்பம் பாடல்களை பாடியுள்ளீர்கள். எதனால்?

பதில் : 2016ம் ஆண்டு குழந்தைகளை வைத்து டிஸ்னி பாடல்களை Broadway Style ல் Dishney Show நடத்தினேன். ஏன் இது போன்று இந்தியாவில் நடத்தக்கூடாது என்று நினைத்தேன். அதன் ஒரு கட்டமாக தான் 120 குழந்தைகளை கொண்டு First Indian Children Musical Program நடத்தினேன். அதில் அனிமேஷன் பாடல்கள், இசைப்பாடல்கள் போன்றவை இடம்பெற்றன. குறிப்பாக இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, வட இந்தியா, தென்இந்தியாவின் கலாச்சாரம் அறிவியல், புவியியல், வரலாறு தொடர்பான செய்திகளை குழந்தைகள் அறிந்து கொள்ள உதவியது. 10 மொழிகளில் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்த குழந்தைகளை கொண்டு அந்தந்த மாநிலத்தின் முக்கியத்துவம், Facts போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு கதையை தயார் செய்தேன். இதில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர்களின் குழந்தைகளும் கலந்து கொண்டனர். இது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

மறக்க முடியாத அனுபவம்

மறக்க முடியாத அனுபவம்

கேள்வி: சூர்யா & ஜோதிகா குறித்து

பதில்: காக்க காக்க திரைப்படத்தில் உன்னை ஒன்று சொல்லணும் என்ற பாடல் இரவு நேர ரெக்கார்டிங்கில் நான் முதன்முதலில் பாடியது, அப்போது அந்த திரைபடத்தில் தான் சூர்யா & ஜோதிகா காதல் மலர்ந்தது. இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. ஏனெனில் கவிஞர் தாமரை 9 மாத கர்ப்பிணியாக என்னுடன் அமர்ந்திருந்தார். இந்த பாடலை நான் இரவு 1.30 மணி முதல் காலை 5 மணி வரை பாடினேன்.செம்ம மெம்மரிஸ் எந்த நேரமும் ரீவைண்ட் செய்யலாம் .சூர்யா மற்றும் ஜோதிகா காதல் ஜோடி பற்றி அனைவருக்கும் தெரியும்.அந்த சமயத்தில் இந்த பாட்டை பல தடவை பல பேர் ரிப்பீட் மோடில் கேட்டுக்கொண்டு இருந்தனர். எதோ ஒரு சந்தோசம் இன்று வரை உள்ளது.

மியூசிக் சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்கிறேன்

மியூசிக் சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்கிறேன்

கேள்வி: நீங்கள் முதன் முதலில் பாடிய பாடல் எது?

பதில்: இயக்குனர் பாலசந்தர் இயக்கிய பொய் படத்தில் நான் பாடிய குட்டி...குட்டி கவிதை நானே என்ற பாடல் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். கே.பாலச்சந்தர் சார் தான் துள்ளி திரிந்த காலம் திரைப்படத்தில் எனக்கு முதல் பாடும் வாய்ப்பை கொடுத்தார். அது தான் திரைபடத்திற்கான நான் பாடிய முதல் ரெக்கார்டிங் பாடல். பிறகு அவர் இயக்கிய 2 ஹிந்தி சீரியல்களில் பாடினேன். கே.பாலச்சந்தர் என்னை நடிக்க அழைத்தார். மியூசிக் சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்கிறேன் என்றேன். பிறகு நடிகர் நாசர் இயக்கிய பாப்கார்ன் திரைப்படத்தில் வயலினிஸ்ட் ஆக நடித்தேன். நடிப்பது ரொம்ப கஷ்டம் என்பதை புரிந்து கொண்டேன்.அதன் பிறகு இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தேன் என்று ஸ்வராஸ்யமாக பல கேள்வி பதில்கள் பாப் ஷாலினி பகிர்ந்து கொண்டார் . முழு வீடியோ காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனல் சென்று காணலாம் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X