140 கோடி பட்ஜெட்.. ஜனநாயகன் மாதிரி கருப்பு ஆகிடக் கூடாது.. க்யூபில் இருந்து லீக் ஆனது எப்படி?

சென்னை: கருப்பு திரைப்படம் இன்று காலை முதல் தமிழ்நாடு மற்றும் உலகளவில் வெளியாகாமல் இருக்கும் நிலையில், புனே உள்ளிட்ட சில வட மாநிலங்களில் திடீரென திரையரங்குகளில் திரையானது எப்படி என்கிற கேள்வியை கருப்பு படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுடன் வந்து தயாரிப்பாளர் டி. சிவா கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்துள்ள கருப்பு திரைப்படம் இந்த நொடி வரை எப்போது வெளியாகும் என்பது தெளிவாக தெரியவில்லை. பிரசாந்த் ரங்கசாமி கருப்பு படம் நாளை தான் வெளியாகும் என பதிவிட்டுள்ளார்.

How Suriya s Karuppu leaked in Pune theaters Production team raises serious concerns

கருப்பு படக்குழு இரவுக்குள் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்து வருகிறோம் என்றும் அதற்குள் படம் ஜன நாயகன் போல லீக் ஆகி விடுமோ என்கிற அதிர்ச்சி எழுந்துள்ளதாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

கடனில் கருப்பு: 54 கோடி ரூபாய் வரை கருப்பு படத்துக்கு கடனிருப்பதாக பிரசாந்த் ரங்கசாமி தெரிவித்துள்ளார். சிலர் 90 கோடி கடன் என்றும் சிலர் 28 கோடி கடன் பிரச்னை என பல தரப்பட்ட தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். பைனான்ஸ் பிரச்னை காரணமாகத்தான் கருப்பு படம் இன்று திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்பது மட்டும் உறுதியாகிறது.

சூர்யாவுக்கு தொடர் சரிவு: தமிழ் சினிமாவில் கொரோனா காலத்தில் அவசரப்பட்டு சூரரைப் போற்று படத்தை அமேசான் ஓடிடியில் சூர்யா வெளியிட்டதில் இருந்தே அவருக்கு பாக்ஸ் ஆபீஸில் தொடர் சரிவு ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். மீண்டும் தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா மற்றும் ரெட்ரோ உள்ளிட்ட படங்களும் சூர்யாவுக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்காமல் சொதப்பின.

140 கோடி பட்ஜெட்: சூர்யாவை வைத்து கோர்ட் டிராமா மற்றும் சாமி கதையை மையமாக வைத்து பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள கருப்பு படத்தின் பட்ஜெட் மட்டுமே 140 கோடி ரூபாய் என தயாரிப்பாளர் டி. சிவா கூறியுள்ளார். விஜய்யின் ஜன நாயகன் படம் ஹெச்டி தரத்தில் லீக் ஆனதை போல கருப்பு படமும் லீக் ஆகிவிடுமோ என்கிற அச்சம் உள்ளது என்றும் க்யூபில் இருந்து படம் எப்படி லீக் ஆனது என்றும் ஸ்டாஃப் தவறு என தொடர்ந்து சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதனால் படத்திற்கு பெரிய இழப்பு என்றும் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X