twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடபழனி முருகன் கோயிலில் ஜோசப் விஜய் என பெயர் வைக்க இதுதான் காரணம்.. எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்!

    |

    சென்னை: நடிகர் விஜய்க்கு வடபழனி முருகன் கோயிலில் தான் பெயர் வைத்தேன் என இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

    Recommended Video

    Vijay க்காக என்னை மாற்றிக்கொண்டேன் | S. A. Chandrasekhar | Naan kadavul illai | Filmibeat Tamil

    நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மத்தியில் மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளதாக எஸ்.ஏ. சந்திரசேகரே ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார்.

    மஹா சமுத்திரம் ரிலீஸ் தேதி மற்றும் டிரைலர் அப்டேட் வெளியானது! மஹா சமுத்திரம் ரிலீஸ் தேதி மற்றும் டிரைலர் அப்டேட் வெளியானது!

    மேலும், ஜோசப் விஜய் எனும் பெயரை வடபழனி முருகன் கோயிலில் வைக்க என்ன காரணம் என்பதற்கும் எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம் கொடுத்துள்ளார்.

    ஒரு வயசுக்கு மேல

    ஒரு வயசுக்கு மேல

    சின்ன வயசுல ஆம்பள பசங்களுக்கு அவங்க அப்பா தான் ஹீரோவா தெரிவாங்க.. ஆனால், வயதுக்கு வந்து சம்பாதிக்க ஆரம்பித்ததும் அப்பா வில்லனாக மாறிடுவார். அதுவும் பெரிய புகழ், உச்சம் எல்லாம் அடைந்ததும் அப்பா சொல்வதை கேட்க முடியாத நிலைக்கு சென்று விடுவார்கள் விஜய்யும் அந்த இடத்தில் தான் உள்ளார் என எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.

    கருவில் இருக்கும்போதே

    கருவில் இருக்கும்போதே

    அப்போதெல்லாம் மருத்துவமனைகளில் என்ன குழந்தை உருவாகி இருக்கிறது என்பதை சொல்லிவிடுவார்கள். என் மகன் கருவில் இருக்கும் போதே அவருக்கு விஜய் என்ற பெயரை நான் சூட்டிவிட்டேன் எனக் கூறிய எஸ்.ஏ. சந்திரசேகர், அமிதாப் பச்சனின் படங்களில் எல்லாம் அவருடைய பெயர் விஜய் என்றே வரும், விஜய் என்றால் வெற்றி என் மகனுக்கு எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று தான் அந்த பெயரை வைத்தேன். அவர் அறிமுகமான படமும் வெற்றி தான் என்றார்.

    வடபழனி முருகன் கோயிலில்

    வடபழனி முருகன் கோயிலில்

    வடபழனியில் உள்ள சாலி கிராமத்தில் தான் விஜய் பிறந்து வளர்ந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், வட பழனி முருகன் கோயிலில் தான் விஜய்க்கு பெயர் சூட்டப்பட்டது என்பதை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். விஜய்க்கு ஜோசப் விஜய் என்கிற பெயர் எப்படி வந்தது என்பது குறித்தும் விளக்கி உள்ளார்.

    விஜயவேல்

    விஜயவேல்

    சோபா சந்திரசேகரின் அப்பா மற்றும் விஜய்யின் தாத்தா விஜயவேல் எனும் பெயரை தான் வைக்க வேண்டும் என விரும்பினார். அவர் விருப்பப்படி விஜயவேல் எனும் பெயரையும் வைத்தோம். அவர் எப்போதுமே விஜய்யை விஜயவேல் என்று தான் அழைப்பார். வெற்றிவேல் என்பதன் பொருள் தான் விஜயவேல் என்றும் கூறினார். கில்லி படத்தில் விஜய்க்கு வேல் என்கிற பெயர் சூட்டப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜோசப் விஜய்

    ஜோசப் விஜய்

    இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் அம்மா ஜோசப் விஜய் என பெயர் வைக்க ஆசைப்பட்ட நிலையில் தான் என் மகனுக்கு ஜோசப் விஜய் என வடபழனி முருகன் கோயிலில் பெயர் வைத்தேன் என்றும் மத நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் பெரியவர்களின் மனம் புண்படக் கூடாது என்பதற்காகவே அந்த பெயர் வைக்கப்பட்டதாகவும், எனக்கு எப்பவும் என் மகன் விஜய் மட்டும் தான் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெளிவான விளக்கத்தை கூறியுள்ளார்.

    ஜாதி மதங்களை கடந்து

    ஜாதி மதங்களை கடந்து

    என்னை போலவே என் மகன் விஜய்யும் ஜாதி மற்றும் மதங்களை கடந்தவராகத் தான் இருந்து வருகிறார் அவர் அனைவருக்கும் பொதுவானவர். எங்களுக்குள் இருக்கும் இந்த மனக்கசப்பு ரொம்ப சிறியது என்றும் அது சீக்கிரமே சரியாகி விடும் என்றும் மீண்டும் இருவரும் கட்டியணைத்துக் கொண்டு ஒன்றாக இருப்போம் என்றும் சந்திரசேகர் கூறியுள்ளார்.

    English summary
    Director SA Chandrasekhar reveals how Vijay name turned Joseph Vijay and another name for actor Vijay in his recent interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X