தமிழ் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்: ஹிருத்திக் ரோஷன்
சென்னை: கிரிஷ் - 3 படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அளித்துள்ள ஆதரவினை கண்டு மகிழ்ந்து போயுள்ள ஹிருத்திக் ரோசன் தன்னுடைய அடுத்த படம் தமிழ் படமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளிவந்துள்ள படம் கிரிஷ்-3. இப்படம் ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வசூலை குவித்து கொண்டிருக்கிறது. இதனால் அவர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் இப்படம் தொடர்பாக சென்னை வந்திருந்த ஹிருத்திக், சென்னையில் கிரிஷ்-3 திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் ரசிகர்களை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹிருத்திக், கூறியதாவது:

தமிழ் ரசிகர்கள் சூப்பர்
நான் இந்தியாவில் எல்லா ஊர்களுக்கும் சென்றுள்ளேன். ஏராளமான ரசிகர்களை சந்தித்து உள்ளேன். ஆனால் சென்னையில் உள்ள ரசிகர்களை போன்று நான் எங்கும் பார்த்தததில்லை.

தமிழ்படத்தில்
நான் நடிக்கும் அடுத்தபடம் தமிழ் படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான வாய்ப்பு வந்தால் நிச்சயம் தமிழ் படத்தில் நடிப்பேன்

ரசிகர்களின் விருப்பம்
ரசிகர்கள் எந்த மாதிரி படங்களை எதிர்பார்க்கிறார்களோ அந்த மாதிரி படங்களை நான் கொடுப்பேன்.எனது கிரிஷ்-3 படம் அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வசூலை பெற்றுள்ளதாக செய்தி அறிந்தேன், மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றார்.

குடும்பத்தினர் அக்கறை
என்னுடைய வளர்ச்சிக்கு என் அப்பா, மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும், குறிப்பாக ரசிகர்களும் அதிக அக்கறை காட்டுகின்றனர் என்றார்.


Click it and Unblock the Notifications











