''கேப்பே தெரியலையாம் கேப்பு.. ஹய்யோ ஹய்யோ..''!
சென்னை: செம உற்சாகத்துடன் மறுபடியும் நடிக்க வந்துள்ளார் வடிவேலு. முன்னாடியை விட கேலியும், கிண்டலும் அவரது நடிப்பில் எக்ஸ்டிராவாகவே தென்படுகிறதாம். இதை நான் சொல்லலங்க, சுத்தி உள்ளவங்க பாராட்டிச் சொன்னதுங்க என்று சந்தோஷமாக கூறுகிறார் வடிவேலு.
ஜெகஜால புஜபல தெனாலிராமன். இதுதான் வடிவேலுவின் ரீ என்ட்ரி படம். இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் படு உற்சாகத்துடன் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் வடிவேலு.
டபுள் ரோலில் இந்தப் படத்தில் நடித்து வரும் வடிவேலுவை, படப்பிடிப்புத் தளத்தில் இருப்பவர்கள் பாராட்டி சந்தோஷிக்கிறார்களாம்.

பொங்கலுக்கு வர்றோம்ணே
இதுகுறித்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் வடிவேலு பேசுகையில், பொங்கலுக்கு வருதுண்ணே படம். 65 பர்சன்ட் வேலை முடிஞ்சு போச்சு.

தெனாலிராமன்- கிருஷ்ணதேவராயர்
எனக்கு படத்தில் இரண்டு வேடம். ஒன்று தெனாலி ராமன். இன்னொன்று கிருஷ்ணதேவராயர். பிரம்மாதமாக வந்துள்ளது.

கேப்ப தெரியலையே...
ஷூட்டிங் ஆரம்பிச்சவே எல்லாப் போரும் கேட்டார்கள், கேப்பே தெரியலையா யோவ்... என்று.

அது என்ன கேப்பு...?
நான் அதுக்கு, அது என்னைய்யா கேப்புன்னு கேட்டேன். இடையில் நடிக்காமல் இருந்ததே தெரியவில்லைன்னாங்க.

பிரஷர், சுகர் போயிரும்ல..!
உங்கள் காமெடியை பார்த்தால் பிரஷர், சுகர் எல்லாம் இறங்கும். ஆனால் இப்ப சிலருடைய காமெடியைப் பார்த்தால் பிரஷர், சுகர் அதிகமாகுது. இதனால் ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியதாக உள்ளது என்றார்கள்.

சந்தோஷமா இருக்குண்ணே...!
கிணற்றை காணவில்லை என்று நான் நடித்த நகைச்சுவை காட்சிகள் தற்போது நிஜமாகவே நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த இரண்டு கால ஓய்வை குடும்பத்தினருடன் செலவிட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது

என்னாது சொந்தப் படமா...!
அதெல்லாம் சொந்தமாக படம் எடுக்கும் எண்ணமே இல்லை, நானும் தயாராக இல்லை...என்று இடத்தைக் காலி செய்தார் வைகைப் புயல்.


Click it and Unblock the Notifications











