இப்பவும் நடிக்கத்தயார் செம்மீன் ஷுலா.... சிகரெட் பிடித்த ஹீரோகளுக்கு பளார் பதில்கள்
சென்னை: செம்மீன் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் செம்மீன் ஷீலா.பழம்பெரும் மலையாள நடிகையான இவர், எம் ஜி ஆருக்கு ஜோடியாக பாசம் திரைப்படம் மூலம் திரை துறைக்குள் வந்தார். பணத்தோட்டம், இதயக்கமலம், கற்பகம், சந்திரமுகி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இவரின் கின்னஸ் சாதனைகள் இன்னும் யாராலும் தொட முடியாத தூரத்தில் தான் உள்ளது. பிரேம் நசீர், சத்யன், மது, சுகுமாரன், ஜெயன், கமலஹாசன் போன்ற முன்னனி நடிகர்களுடனும் நடித்தவர்.
புகழ்பெற்ற மலையாள நடிகை ஆயிற்றே, தேங்காய் எண்ணை, கிழங்கு என கேரள வழக்கம், உணவு முறைகள், பேச்சு இருக்கும் என நினைத்து பேசினோம். ஆனால் நாம் நினைதத்தே வேறு.. இதோ அவரே நம்மிடம் பேசிய சுவாரஸ்யமான விஷயங்கள்.

ஷீலாதேவி ஷீலா ஆனது
கேள்வி : உங்க முதல் படம் என்ன?
பதில் : 13 வயசு அப்போ நான் நடிக்க வந்தப்போ. பாசம் படத்துல என்னோட பெயர் ஷீலா. கூடவே தேவி சேர்த்து ஷீலா தேவி ஆகிட்டு. அதுக்குப்பறம் தான் மலையாளம் படத்துக்கெல்லாம் போனது.அதன் பின் ஷீலா என்ற பெயர் மட்டுமே பயன் படுத்தினேன் .

சிவகுமார் என் எழுத்துக்களுக்கு
கேள்வி : நடிப்பை தாண்டி வேறு என்ன எல்லாம் செஞ்சிருக்கீங்க?
பதில் : மூனு படம் டைரக்ஷன் பண்ணிருக்கேன். சில படங்களுக்கு கதை எழுதி இருக்கேன். அப்பறம் விகடன் ல சில கதைகள் எழுதிருக்கேன். நடிகர் சிவகுமார் என்னோட கதைக்கு படம் வரஞ்சிருக்காரு. பெயிண்டிங் ரொம்ப பிடிக்கும். எக்ஜிபிஷன் நடந்தப்போ பெயிண்டிங் வச்சி, அதுல கிடைச்ச பணத்த, கேரளா, தமிழகத்துல வெள்ளம் வந்தப்போ நிவாரண உதவிகளுக்கு குடுத்துருக்கேன். ஏதோ என்னால முடிஞ்ச சின்ன அனில் போன்ற உதவி அவ்ளோதான்.

கவலையில சிகரெட் பிடிக்கிறது
கேள்வி : வளர்ந்து வரும் நடிகர்களுக்கு உங்களோட டிப்ஸ்?
பதில் : ஒரு நடிகருக்கு லட்சோப லட்சம் ரசிகர்கள் இருக்காங்க. அந்த நடிகரோட ட்ரஸ், ஹேர் ஸ்டைல்ன்னு எல்லாத்தையும் பாலோ பண்றாங்க. படங்கள் ல ஹீரோக்கள் கவலையில சிகரெட் பிடிக்கிறது, குடிக்கிறது மாதிரியான காட்சிகள் வரும் போது, ஒஹோ நாமளும் சோகமா இருந்தா அப்படிதான் பண்ணனுமோ-ன்னு நெனச்சி, அவங்களும் அதயே பண்றாங்க. அவங்கள ஒரு கடவுளாத்தான் பாக்குறாங்க. அதனால இது போல விஷயங்கள்ல்லாம் தவிர்த்து, வளர்ந்து வரும் நடிகர்கள், பெரிய பெரிய ஹீரோஸ் எல்லாம் கொஞ்சம் கவனத்துல வச்சி நடிக்கனும்ம்னு கேட்டுக்கிறேன்.

கிராமிய படங்கள் என் ஆசை
கேள்வி : ஓடிடி பற்றிய உங்கள் கருத்து?
பதில் : இப்ப வந்துள்ள புது இயக்குனர்களுக்கு மிக நல்ல ப்ளாட்பார்ம். நிறைய திறமையுள்ள இயக்குனர்கள், நடிகர்கள் ல்லாம் இது மூலம் வெளி வருவாங்க. எங்க காலத்துல ல்லாம் இப்படி வசதி இல்ல. இப்ப இருக்கவங்க நல்லா பயன்படுத்தி முன்னுக்கு வாங்க.
கேள்வி : உங்களுக்கு இப்பவும் நடிக்க விருப்பமா?
பதில் : நிச்சயமா. சின்ன கிராமத்து கதை, ஏழ்மையான கேரக்டர், கிராமிய படங்கள் ல நடிக்கனும்ன்னு ஆசை. அது போல கிடைச்சா நிச்சயம் பண்ணுவேன். அது மட்டும் இல்லாம புதுமுக இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் கூடவும் நடிக்க ஆசை. இவ்ளோ பெரிய ஆக்டர்.. இவங்க கூடல்லாம் நடிக்க ஒத்துக்குவாங்களான்னு யாரும் நெனக்க வேண்டாம். நல்ல திறமையாளர்கள் நிச்சயம் வெளில வரனும். வாழ்த்துக்கள் என்று கூறினார் திரையுலக சிம்ம சொப்பனம் செம்மீன் ஷீலா. முழுவீடியோவையும் பிலிம்பீட் தமிழ் யூட்யூப் தளத்தில்லும் காணலாம்.


Click it and Unblock the Notifications











