முத்தக்காட்சிக்கும் மேலாக நடிக்க நான் ரெடி...எப்போது என்று சொல்லும் கண்ணா ரவி

சென்னை: இயக்குநர் எழுதியது மாதிரி நடித்து கொடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று சாணிகாயிதம் திரைப்பட நடிகர் கண்ணா ரவி தெரிவித்தார்.

மண்டேலா படத்தில் மதியாகவும், கைதி படத்தில் அஜாஸ் அகமதாகவும், சாணிகாயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் கணவராகவும் நடித்து ரசிகர்களிடம் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் கண்ணா ரவி.

ZEE 5 நிறுவனம் தயாரித்து ஒடிடியில் வெளியாகியுள்ள பிங்கர்டிப் படத்தில் நடித்துள்ள கண்ணாரவி, நமது பிலீம்பீட்க்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

நம்பிக்கையின் வெளிப்பாடு

நம்பிக்கையின் வெளிப்பாடு

கேள்வி: உங்களை திரைப்படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள், ஏன் தேடி வருகின்றனர்?

பதில்: தேடி வருவது என்பது பெரிய வார்த்தை. நான் இந்த இடத்தை அடைவதற்கு 5 வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ளேன். அதன் அனுபவம் தான்,

எந்த கேரக்டர் கொடுத்தாலும் நன்றாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவானது. இந்த இயக்குநர்கள் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று குறிப்பாக சில பேரை ஆசைப்பட்டேன்,அதுவும் நடந்து வருகிறது. நான் சினிமாவை மட்டுமே நம்பியிருக்கிறேன். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடே எனக்கு இது போன்ற கதாபாத்திரங்கள் அமைகின்றன என்றார்.

வில்லன் கதாபாத்திரம்

வில்லன் கதாபாத்திரம்

கேள்வி: தற்போது நீங்கள் நடித்துள்ள Fingertip படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: Fingertip இயக்குநர் சிவா பொறுமையானவர். லாக்டவுனின் போது என்னை அழைத்து, உங்களுடைய நடிப்பு எனக்கு பிடிக்கும். ஒரு கதை அனுப்புகிறேன். அதை படித்து பார்த்து விட்டு கூறுங்கள். வில்லன் கதாபாத்திரம் என்றார். கதையை படித்தேன். ரொம்ப அருமையாக இருந்தது. நான் மனதில் நினைத்தது என்னவென்றால், உங்களை பொறுத்தவரை வில்லன் கதாபாத்திரம், என்னை பொறுத்தவரை நான் தான் அதில் கதாநாயகன். உடனே ஒப்புக் கொண்டேன். நான்கு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினார். இன்னும் சொல்லப்போனால் இயக்குநர் சிவா, குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிற மாதிரி சொல்லிக் கொடுப்பார். அவருடன் இணைந்து அடுத்த படம் பண்ணனும் என்பது எனது ஆசை என்றார்.

முத்தக்காட்சி

முத்தக்காட்சி

கேள்வி: முத்தக்காட்சியில் நடித்தது குறித்து ...

பதில்: இதுவரை எனது குறும்படங்களில் எந்தவித முத்தக்காட்சிகளிலும் நான் நடித்தது கிடையாது. ஆனால் பிங்கர் டிப்ஸ் இயக்குநர் சிவா கூறுகையில், படத்தில் ஒரு முத்தக்காட்சி உள்ளது. உன்னால் நடிக்க முடியுமா என்றார். கதைக்கு தேவைப்பட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றேன். இயக்குநர் எழுதியது மாதிரி நடித்து கொடுக்க வேண்டும் என்பது எனது ஆசை .அது மட்டும் அல்லாமல் முத்தக்காட்சிக்கும் மேலாக நடிக்க நான் ரெடி அனால் அப்படிப்பட்ட அழுத்தமான கதைகள், மக்கள் மனதை வருடும் கதைகள் வரும் பொழுது எப்படி என்றாலும் நான் தயார் என்றார் கண்ணா ரவி.

எனக்கு அங்கீகாரம்

எனக்கு அங்கீகாரம்

கேள்வி: உங்களுக்கு எப்போது சரியான அங்கீகாரம் கிடைத்தது?

பதில்: மாநகரம் படத்தை நான் பார்க்கும்பொழுது, இந்த படத்தின் இயக்குநருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அப்பொழுது என்னுடைய Broken Image குறும்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பார்த்துள்ளார். அதன் மூலமாக தான் எனக்கு கைதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கைதி படம் தான் எனக்கு அங்கீகாரத்தை கொடுத்தது. நல்ல கதையில் நல்ல கதாபாத்திரம் அமைந்தது எனக்கு சந்தோஷம் என்றார்.

இயக்குநர் நினைத்தால்....

கேள்வி: சாணிகாயிதம் திரைப்படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: நான் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்ததால், இயக்குநர் அருண்மாதேஸ்வரனின் ராக்கி படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. இது குறித்து நான் அவரிடம் கூறும்போது, அடுத்த படத்தில் கண்டிப்பாக உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்றார். அவர் கொடுத்த வாக்குறுதியின் படி, என் மீது நம்பிக்கை வைத்து, சாணிகாயிதம் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கணவராக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். மேலும் இயக்குநர் கூறுகையில், இப்படத்தில் உனக்கான ரோல் முக்கியமானது. ஸ்கீரினில் கொஞ்சம் நேரம் தான் வருவாய். ஆனால் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் என்றார். அவர் கூறியது போல், நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. என்ன ஒரு வருத்தம் என்னவென்றால், குடிசையில் வைத்து என்னை எரித்து விட்டார்கள் என்று சிரித்தபடி தெரிவித்தார் கண்ணா ரவி . ஒரு இயக்குநர் நினைத்தால் மட்டுமே, சிறந்த கதாபாத்திரத்தையும், சிறந்த நடிகனையும் உருவாக்க முடியும் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/aeDFc67slHg இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். நடிகர் கண்ணா ரவி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளார். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X