தந்தையை கடவுளாக பார்க்கும் விஜய்… மனமுருகி பதில் சொன்ன தளபதி
சென்னை : விஜய் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கி, வரும் 13-ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக தயாராகி இருக்கும் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் இதை தயாரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று நடிகர் விஜய் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து பல கேள்விகளுக்கும் சுவாரஸ்யமான பதில்கள் அளித்துள்ளார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இதில் தொகுப்பாளராக மாறி விஜய்யை கேள்விகள் கேட்டுள்ளார்.
விஜய் பல கேள்விகளுக்கு பதில் சொன்னாலும் அவர் தனது தந்தையை பற்றிய கேள்விக்கு சொன்ன பதில் அனைவரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

பத்து வருடம் கழித்து
நடிகர் விஜய் பத்து வருடங்களுக்கு பிறகு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு முழு நேர பேட்டியை கொடுத்துள்ளார். எதற்காக பத்து வருட தாமதம் என்ற கேள்விக்கு, " இறுதியாக நான் கொடுத்த பேட்டி தவறாக சித்தரிக்கப் பட்டுவிட்டதாகவும், நான் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று புரிந்து கொள்ள அது வெளியே வேறு விதமாக சென்றடைவதால் அதை தவிர்ப்பதாகவும் " விஜய் விளக்கம் அளித்துள்ளார். பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீடு நடக்காததால் அதை ஈடு செய்யும் விதமாக விஜய் பேட்டியை ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. நேற்று விஜய் அளித்த பேட்டி அவரது ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடியோ வெளியீடு செய்தால் கிடைக்கும் விளம்பரம் விஜய் அளித்த பேட்டி உருவாக்கியுள்ளது.

எல்லா மதமும்
கடவுள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய் " தான் கோயிலுக்கு செல்வேன் தர்காவுக்கு செல்வேன் சர்ச் க்கும் செல்வேன். இதையே தனது பிள்ளைகளுக்கும் கற்று தந்துள்ளேன். என் அம்மா ஒரு இந்து என் தந்தை ஒரு கிருத்துவர் என குறிப்பிட்டுள்ளார். சர்க்கார் பட ரிலீஸின்போது அவரை ஜோசப் விஜய் என மத அடையாளப்படுத்தி அவர்களுக்கு நான் அனைத்து மதத்திற்கும் ஆனவன் என மறைமுகமாக சொல்லியுள்ளார்.

பீஸ்ட் படம் பற்றி விஜய்
ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கும் பீஸ்ட் படத்தை பற்றி ஒரு கேள்வியாக " பீஸ்ட் எப்படி இருக்குன்னு நினைக்கிறீங்க " என நெல்சன் கேட்க அதற்கு பதிலாக " படம் வந்த பிறகுதான் தெரியும். என் படத்தைப் பற்றி நானே சொல்ல முடியாது. சில படம் கிளிக் ஆகும் சில படம் கிளிக் ஆகாது. நான் நல்லா இருக்குன்னு சொல்லி மக்கள் என்னை திட்டுவதற்கு பதில்..படம் நல்லா இருக்கும் என நினைக்கிறேன் என்பதாக விஜய் பதிலளித்துள்ளார். பீஸ்ட் படம் ரிலீசுக்கு முன்பே பல கோடி டேபிள் Profit ஆக வந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
Recommended Video

அப்பா கடவுள்
நெல்சன் - விஜய் நேர்காணலில் பல கேள்விகளுக்கு விஜய் ஜாலியாக பதில் சொன்னாலும் அப்பா அம்மா உறவுகள் பற்றிய கேள்விக்கு விஜய் சொன்ன பதில் பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. " அப்பா ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேர் மாதிரி. அப்பாவுக்கும் கடவுளுக்கும் ஒரு வித்தியாசம் தான். கடவுளை நம்மால் பார்க்க முடியாது. அப்பாவை நம்மால் பார்க்க முடியும் அதுதான் வித்தியாசம் " என்று அவர் அளித்த பதில் பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











