twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive : அமைதியா இருந்த என்னை வில்லன் ஆக்கிட்டாங்க: ‘சண்டக்கோழி 2’ அர்ஜெய்

    சண்டக்கோழி 2 பட வில்லன் அர்ஜெய் தனக்கு தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களே அமைவதாகத் தெரிவித்துள்ளார்.

    |

    சென்னை: தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களே அமைந்து வந்தாலும், நிஜத்தில் தான் மிகவும் அமைதியானவன் எனத் தெரிவித்துள்ளார் சண்டக்கோழி 2 பட வில்லன் அர்ஜெய்.

    நான் சிவப்பு மனிதன் திரைப்படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் அர்ஜெய். முதல் படத்திலேயே லட்சுமி மேனனை பலாத்காரம் ரேப் செய்யும் காட்சியில் நடித்து அதிர வைத்தவர்.

    எமன் உள்பட தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்துவரும் அர்ஜெய்க்கு ஒரு முக்கிய அந்தஸ்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது சண்டக்கோழி 2. இதனால் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார் அர்ஜெய்.

    ஒன்இந்தியாவுக்காக அவரை சந்தித்தேன். நம்மிடம் அவர் பேசியதில் இருந்து....

    10 வயது சிறியவர் மீது காதலில் விழுந்தது ஏன்?: ப்ரியங்கா சோப்ரா விளக்கம் 10 வயது சிறியவர் மீது காதலில் விழுந்தது ஏன்?: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்

    வில்லன் இமேஜ்:

    வில்லன் இமேஜ்:

    "முதல் படத்திலேயே லட்சுமிமேனனை ரேப் செய்யும் காட்சியில் நடித்து வில்லன் இமேஜை அடைந்துவிட்டேன். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து அது போன்ற கதாபாத்திரங்களே வந்ததால், குழம்பிப் போய்விட்டேன்.

    சண்டக்கோழி 2 வாய்ப்பு:

    சண்டக்கோழி 2 வாய்ப்பு:

    நல்ல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக கொஞ்ச காலம் பொறுத்திருந்தேன். அப்போது கிடைத்தது தான் சண்டக்கோழி 2 வாய்ப்பு. நிறைய கஷ்டப்பட்டு நடித்த படம். இப்போது அந்த கஷ்டத்துக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

    க்ளைமாக்ஸ் காட்சி:

    க்ளைமாக்ஸ் காட்சி:

    சண்டக்கோழி 2 படப்பிடிப்பின் போது க்ளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக மொட்டை வெயிலில், செம்மண்ணில் காய்ந்து கிடந்தோம். விஷாலுடன் சண்டை போடும் போது, அவருக்கு டப் கொடுக்க நிறைய சிரமப்பட்டேன். அவர் நிறைய என்கரேஜ் செய்தார்.

    பழகி விட்டது:

    பழகி விட்டது:

    வில்லன் இமேஜுடன் வெளியே செல்லும் போது நிறைய இடங்களில் திட்டுவாங்கி இருக்கிறேன். முதலில் கஷ்டமாக இருந்தது ஆனால் இப்போது பழகிவிட்டது.

    ஹீரோவாக ஆசை:

    ஹீரோவாக ஆசை:

    இயல்பாகவே நான் ரொம்ப அமைதியான பையன். என்னை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டும் தான் அது தெரியும். முதலில் நான் ஹீரோவாக நடிக்க தான் ஆசைப்பட்டேன். ஆனால் குணாதிசயத்திற்கு எதிராக வில்லனாக நடிக்க வந்துவிட்டேன். ஏனென்றால், அது தான் எனக்கு செட் ஆகிறது.

    ரொமான்ஸ் காட்சிகள்:

    ரொமான்ஸ் காட்சிகள்:

    பொதுவாக வில்லன்களுக்கு ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் இருக்காது. ரேப் சீன் தான் இருக்கும். அதனால் எனக்கு யாரையும் ரொமான்ஸ் செய்ய வேண்டிய கட்டாயம் இல்ல. ஆனா சண்டை மட்டுமில்ல, ரொமான்ஸ் காட்சிகளிலும் நான் பட்டய கிளப்புவேன்" என இவ்வாறு அவர் கூறினார்.

    English summary
    SandaKozhi 2 villain actor Arjai says that basically he is a very silent boy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X