உதயநிதி,பவன் கல்யாண்..தொடர்ந்து அரசியல் தலைவர்கள் கூட நடிக்கும் வாய்ப்பு வந்துருக்கு..நிதி அகர்வால்!

சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி, நிதி அகர்வால், பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கலகத்தலைவன்.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் நாயகி நிதி அகர்வால் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை காணலாம்.

 கடினமான உழைப்பு

கடினமான உழைப்பு

கேள்வி: கலகத்தலைவன் படத்தில் நடித்தது குறித்து...

பதில்: கலகத்தலைவன் படத்தில் நடித்ததில் ரொம்ப சந்தோஷம். பூமி, ஈஸ்வரன் படத்திற்கு உழைத்ததை விட இந்த படத்திற்கு அதிகம் உழைத்துள்ளேன். நிறைய லுக் டெஸ்ட் எடுத்தோம். மேக்கப் சுத்தமாக கிடையாது. ஹேர் ஸ்டைல் கிடையாது. சிம்பிளாக வரக்கூடிய நகரத்து பெண். இந்த கதாபாத்திரத்தை நான் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார். இயக்குநர் மகிழ்திருமேனி மற்றும் நடிகர் உதயநிதிக்கும் எனது நன்றி. படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் மைதிலி. மெடிக்கல் ஸ்டூடண்ட். அனுபவம் நிறைந்த பெண். இந்த கதாபாத்திரத்திம் படத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படும். இயக்குநர் மகிழ் திருமேனியின் படத்தில் எந்த கதாபாத்திரமும் முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது இல்லை. படத்தில் எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். இயக்குநர் மகிழ் திருமேனியின் வாய்ஸ், பிக்பாஸ் வாய்ஸ் மாதிரி இருக்கும். இப்படத்திற்கு பிக்பாஸ் இயக்குநர் மகிழ்திருமேனி தான் என்றார்.

 இரண்டு, மூன்று நாட்கள்

இரண்டு, மூன்று நாட்கள்

கேள்வி: கலகத்தலைவன் படத்தில் உங்களுக்கு பிடித்த டயலாக் எது?

பதில்: முதல் நாள் எனக்கு தான் ஷூட் இருந்தது. நானும், நடிகர் உதயநிதி ஸ்டாலினும் காபி ஷாப்பில், அவர் என்னிடம் "என்னை உனக்கு தெரியாது" என்கிற டயலாக் பேசுவார். அது தான் எனக்கு பிடித்தது. இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து ரசிக்கும் படியாக இருந்தது என்றார்.

 ஆரவ் நன்றாக நடித்துள்ளார்

ஆரவ் நன்றாக நடித்துள்ளார்

கேள்வி: கலகத்தலைவன் படத்தில் நிறைய அடி வாங்கீனீர்களாமே?

பதில்: கலகத்தலைவன் படத்தில் அடி வாங்கியது ரொம்ப முக்கியமானது. படத்தில் அது ஒரு முக்கியமான காட்சியும் கூட. அது குறித்து நான் சொல்ல மாட்டேன் . முதல் முறையாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன். அது எனக்கு ரொம்ப Fun ஆக இருந்தது. நடிகர் ஆரவ்வின் கதாபாத்திரம் ரொம்ப முக்கியமானது. அவர் நன்றாக நடித்திருப்பதால், படமும் நன்றாக வந்துள்ளது என்றார்.

 எதிர்பாராதது

எதிர்பாராதது

கேள்வி: நடிகர் பவன் கல்யாண், நடிகர் உதயநிதி ஆகியோர் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: நடிகர் பவன் கல்யாணுடன் ஹரிஹர வீரமல்லும் படத்தில் நடித்து வருகிறேன். ஆனால் முதலில் ஒப்பந்தமானது கலகத்தலைவன் படத்தில் தான். நடிகர் உதயநிதி, நடிகர் பவன் கல்யாண் ஆகியோர் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சிறந்த நடிகரும் கூட. என்னை பொறுத்தவரை இருவரும் ஒரே மாதிரி தான் காணப்படுகிறார்கள். வித்தியாசம் எதுவுமில்லை என்றார். இந்த இரண்டு படவாய்ப்புகளும் எதிர்பாராதவிதமாக வந்தது என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=hqDgUrZa3Cs இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X