அன்று அப்படி சொன்னீங்க, இன்று இப்படி சொல்றீங்க: என்னங்க சிம்பு இப்படி பண்றீங்களேங்க
Recommended Video

சென்னை: அண்டாவில் பாலை காய்ச்சி மக்களுக்கு கொடுக்கச் சொன்னேன் என்று சிம்பு தெரிவித்துள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. தன் பட ரிலீஸையொட்டி பேனர், போஸ்டர் வைப்பது பாலாபிஷேகம் செய்வது எல்லாம் வேண்டாம் என்று தெரிவித்தார் சிம்பு.
அவர் அறிவிப்பை பார்த்து சிலர் கிண்டல் செய்ததையடுத்து மனதை மாற்றிக் கொண்டார்.
பாலாபிஷேகம்
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு பேனர், கட்அவுட்டுகள் வைத்து பாக்கெட்டில் இல்லை அண்டாவில் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார் சிம்பு. அந்த வீடியோவை பார்த்து பால் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிம்பு
அண்டாவில் பாலாபிஷேகம் செய்யச் சொல்லவில்லை. அண்டாவில் பால் காய்ச்சி இல்லாத மக்களுக்கு கொடுக்குமாறு கூறினேன் என்று சிம்பு இன்று தெரிவித்துள்ளார். பாலாபிஷேகம் பற்றி நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடியோ
சிம்புவின் இன்றைய பேட்டியை பார்த்தவர்கள் ஒரு வேளை தவறாக புரிந்து கொண்டுவிட்டோமோ என்று அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்தால் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. என்னய்யா சிம்பு பண்றீங்களேய்யா?
கேலி
சிம்பு இப்படி மாற்றி மாற்றி பேசுவதை பார்த்து அவரை கிண்டல் செய்கிறார்கள். பட ரிலீஸுக்கு முன்பு 3 முறை மாற்றி மாற்றி தெரிவித்துள்ள சிம்புவை சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











