பாவம், பிறந்தநாளும் அதுவுமா நடிகர் தலையில் விழுந்த இடி
மும்பை: பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் பிறந்தநாள் அன்று தான் அந்த அதிர்ச்சிகரமான விஷயம் நடந்துள்ளது.
பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு கடந்த ஆண்டு மகிழ்ச்சி மற்றும் அதிர்ச்சி கலந்த ஆண்டாக அமைந்தது. அவர் நடித்த பதாய் ஹோ மற்றும் அந்தாதுன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகின.
அதே சமயம் அவரின் மனைவி தாஹிரா கஷ்யப்புக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து ஆயுஷ்மான் குரானா கூறியிருப்பதாவது,

மனைவி
நான் பதாய் ஹோ மற்றும் அந்தாதுன் ஆகிய படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தேன். என் பிறந்தநாள் அன்று என் மனைவிக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. என் பிறந்தநாள் அன்று மன்மர்ஜியான் படம் பார்த்தோம். அன்று தான் நோய் பற்றி தெரிய வந்தது.

தைரியம்
தாஹிராவுக்கு புற்றுநோய் இருப்பது குறித்து அறிந்து அதிர்ந்துவிட்டேன். ஆனால் என் மனைவி ரொம்ப தைரியமாக இருந்தார். அதனால் தான் நான் உடைந்து போகாமல் இருந்தேன். அவரின் நிலையை பார்த்து ரொம்ப கஷ்டமாக இருந்தது.

விளம்பரம்
நான் வாழ்க்கையை கொண்டாட விரும்புகிறேன். நோயை தைரியமாக எதிர்த்து போராடுவேன் என்றார் தாஹிரா. அதனால் தான் நான் படங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு மனைவியையும் கவனித்துக் கொண்டேன். அவரின் தைரியத்தை பார்த்து தான் நான் தைரியமாக இருந்தேன்.

தாஹிரா
புற்றுநோயை வெல்வது எப்படி என்று என் மனைவி லெக்சர் கொடுக்கிறார். அவர் ஒரு முன்மாதிரி பெண். தாஹிரா ஒரு படத்தை இயக்க உள்ளார். பெண்களை மையமாக வைத்து படம் இயக்குகிறார். தாஹிரா இயக்கத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன். என்னை வைத்தும் படம் எடுப்பார் என்று நம்புகிறேன் என்கிறார் ஆயுஷ்மான்.


Click it and Unblock the Notifications