twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லிங்குசாமி இப்படி செய்ததால் அழுதேன்...வாரியர் பட நடிகை கிருத்தி ஷெட்டி சொன்ன காரணங்கள்

    |

    சென்னை: எனக்கும், இயக்குநர் லிங்குசாமிக்கு இடையே நடந்தது என்ன? எனது கண்களில் கண்ணீர் வந்தது எதற்காக ? என்று பல சர்ச்சைக்கு பதில் அளித்து உள்ளார் வாரியர் பட நடிகை கிருத்தி ஷெட்டி.

    மேலும் அவர் கூறுகையில், மனிதனுக்கு முதுகெலும்பு எவ்வளவு முக்கியமோ, அது மாதிரி எனக்கு எனது அம்மா. நான் காலையில் எழுவதிலிருந்து தூங்கும் வரை குழந்தை மாதிரி பார்த்துக் கொள்வார் என்றும் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பல விஷயங்களை ஜாலியாக பேசி உள்ளார் .

    'தி வாரியர்'உண்மை கதை.. இயக்குநர் எனன சொல்லிருக்காருனு பாருங்க!'தி வாரியர்'உண்மை கதை.. இயக்குநர் எனன சொல்லிருக்காருனு பாருங்க!

    தனக்கு பிடித்த நடிகை

    தனக்கு பிடித்த நடிகை

    கேள்வி: கிருத்தி ஷெட்டி, உங்களை சிலர் கீர்த்தி என்றும் க்ரிதி என்றும் மாற்றி அழைக்கிறார்களே.... அதை எப்படி எடுத்து கொள்கிறீர்கள்?

    பதில்: நடிகர் ராம்சரண், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் என்னை கீர்த்தி என்று அழைக்கும்போது, கிருத்தி என்று கூப்பிடுங்கள் என்று சொல்வேன். எனக்கு நடிகை கீர்த்தி சுரேஷை ரொம்ப பிடிக்கும். அவரை போன்று தேசிய விருது வாங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் என்னை எல்லோரும் கீர்த்தி என்று தான் அழைக்கிறார்கள். இதுவும் சந்தோஷமாக தான் இருக்கிறது. ஏனெனில் தனக்கு பிடித்த நடிகையின் பெயரை சொல்லி அழைக்கும்போது சந்தோஷப்படுகிறேன். தமிழ் ரசிகர்கள் என்னிடம் அதிக அன்பையும் நல்ல படங்களையும் எதிர்பார்க்கின்றனர் . முடிந்தவரை செய்வேன் .

    லிங்குசாமி சொன்ன ஐடியா

    லிங்குசாமி சொன்ன ஐடியா

    கேள்வி: உங்களுடைய காஸ்ட்யூமை இந்த படத்தில் யார் கவனித்து கொண்டார்கள்?

    பதில்: என்னுடைய காஸ்ட்யூமை நானும், அம்மாவும் பார்த்துக் கொண்டோம். என்னுடைய அம்மா தான் முழு ஆதரவு அளித்தார். மனிதனுக்கு முதுகெலும்பு எவ்வளவு முக்கியமோ, அது மாதிரி எனக்கு எனது அம்மா. நான் காலையில் எழுவதிலிருந்து தூங்கும் வரை குழந்தை மாதிரி பார்த்துக் கொள்வார். பாடல்களுக்கு மட்டும் காஸ்ட்யூமை இயக்குநர் லிங்குசாமி ஏற்பாடு செய்தார். அவர் என்னிடம் கூறுகையில், No Reference... நீயே Create பண்ணு என்றார். நானும் அதையே செய்தேன்.

    என்னுடைய ஸ்டைல் கொஞ்சம்...

    என்னுடைய ஸ்டைல் கொஞ்சம்...

    கேள்வி: புல்லட் பாடல் குறித்து நீங்கள் கூற விரும்புவது....

    பதில்: நடன இயக்குநர் சேகர் எனக்கு ரொம்ப Comfortable Step கொடுத்தார். அவரை பொறுத்தவரை ஆர்டிஸ்ட் ஸ்டைல் பார்த்து, அதற்கேற்ப Step கொடுப்பார். புல்லட் பாடலில் என்னுடைய ஸ்டைல் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன். 2 நாள் பயிற்சி எடுத்துக் கொண்டேன். பயிற்சி செய்யும்போது கஷ்டமாக தெரிந்த விஷயம், பயிற்சிக்கு பிறகு எளிதாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இயக்குநர் லிங்குசாமி எனக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ அனுப்பினார். அதில் 3 சிறுவர்கள் புல்லட் பாடலுக்கு விக் வைத்து, எஸ்டிஆர் பாடுவது போலவும், அருமையாக ஆடியதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது .

    கம்யூனிகேஷன் ப்ராப்ளம்

    கம்யூனிகேஷன் ப்ராப்ளம்

    கேள்வி: மேடையில் இயக்குநர் லிங்குசாமி அழுதது குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: இயக்குநர் லிங்குசாமி மேடையில் அழுவதை பார்க்கும்போது, எனக்கு அழுகையே வந்து விட்டது. நான் பொதுவாக எமோஷனலாக இருப்பேன். அவர் அழுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் ரொம்ப தூய்மையானவர். வாரியர் படப்பிடிப்பின்போது இயக்குநர் லிங்குசாமி என்னை அழவைத்து விட்டார் என ஒரு சில மீடியாக்கள் செய்தி பரப்பிவிட்டனர். ஆனால் அது உண்மையில்லை. அவர் என்னை ஒன்றும் செய்யவில்லை. நடிகர் ராம், நடிகை நதியா ஆகியோருக்கு தமிழ் நன்றாக தெரியும். ஆனால் எனக்கு 10% கூட தமிழ் தெரியாது. என்னுடைய முதல்நாள் ஷூட்டிங்கின்போது, இயக்குநர் லிங்குசாமி தமிழில் எனக்கு காட்சிகள் பற்றி விளக்கமளித்தார். என்னை பொறுத்தவரை முதலில் நன்றாக செய்தால் மட்டுமே கடைசி வரை நன்றாக இருக்கும் என்று நானே நினைத்துக் கொண்டு பிரஷரை ஏற்றிக் கொண்டேன். முதலில் இயக்குனர் Wavelength Match செய்ய வேண்டும். எப்படி அவர் சொல்வதை புரிந்து கொண்டு, நம்மால் எப்படி நடிக்க முடியும் என்று பயந்தேன். அதுவே எனக்கு மிகப்பெரிய மனஅழுத்தத்தை கொடுத்தது. அங்கு நடந்தது Communication Problem மட்டுமே. என்னுடைய மனஅழுத்தத்தின் காரணமாக எனது கண்களில் கண்ணீர் வந்தவுடன், இயக்குநர் லிங்குசாமி சுற்றி சுற்றி வந்தார். உனக்கு ஒன்றும் பிரச்னை இல்லையே என்று கேட்டார். உண்மையை சொல்லவேண்டுமென்றால் அவர் மாதிரி ஒரு நல்ல மனிதரை பார்ப்பது கடினம் என்றார்.

    நிஜவாழ்க்கையில் பாகுபலி சிவகாமி

    நிஜவாழ்க்கையில் பாகுபலி சிவகாமி

    கேள்வி: நடிகை நதியா குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: வாரியர் படத்தில் என்னுடைய கதாபாத்திரமானது நடிகர் ராமுக்கு அடுத்தபடியாக, நடிகை நதியா மேடத்துடன் தான் அதிகம். அவர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னை பொறுத்தவரை ரொம்ப சந்தோஷம். நடிகை நதியா சேரில் உட்காரும்போது ராணி மாதிரி இருப்பாங்க. இன்னும் சொல்லப்போனால் நிஜவாழ்க்கையில், பாகுபலி சிவகாமி மாதிரி தெரிவார்கள். ஒரு நாள் அவரிடம், ராணி மாதிரி தோன்றுவது எப்படி என்று கேட்டேன். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்றார். இது குறித்து இயக்குநர் லிங்குசாமி கூறுகையில், உள்ளத்தில் நல்ல எண்ணம் இருக்கும்பொழுது, வெளித்தோற்றம் நன்றாக இருக்கும் என்றார் அது தான் நதியா மேம் அழகு ரகசியம். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/fucWVea-DBc இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். வாரியார் பட நடிகை கிருத்தி ஷெட்டி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளார். பல பாகங்களாக யூட்யூப் சேனலிலும் உள்ளது. மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    I cried because Lingusamy did this...Warrior actress Kriti Shetty's reveals the reason
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X