நான் இவரை அல்ல அவரை மட்டுமே காதலித்தேன்: வாரிசு நடிகை ஓபன் டாக்
மும்பை: தான் ஒரேயொருவரை தான் காதலித்ததாக பாலிவுட் நடிகை சாரா அலி கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா நடித்த கேதர்நாத் மற்றும் சிம்பா ஆகிய படங்கள் ஹிட்டாகியுள்ளன. இதையடுத்து பாலிவுட்காரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அவர்.
இந்நிலையில் அவர் கேதர்நாத் பட ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட்டை காதலிப்பதாக பேச்சு கிளம்பியது.

காதல்
நடிகர் கார்த்திக் ஆர்யன் மீது ஈர்ப்பு இருப்பதாக சாரா அலி கான் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இந்நிலையில் விருது விழாவில் சாராவை கார்த்திக் ஆர்யனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ரன்வீர் சிங். இதையடுத்து சாரா, ஆர்யன் பற்றியும் பேசப்படுகிறது.

நடிகர்
தன் காதல் வாழ்க்கை பற்றியே அனைவரும் பேசுவது குறித்து அறிந்த சாரா தான் யாரையும் காதலிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் சிங்கிளாக உள்ளேன். யாரையும் குறிப்பாக எந்த நடிகரையும் காதலிக்கவில்லை என்கிறார் சாரா.

சாரா
சாராவும் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் வீர் பஹாரியாவும் ஒரு காலத்தில் காதலித்தார்கள். இந்நிலையில் அது குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் சாரா. வீர் பஹாரியாவை காதலித்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

படங்கள்
வீர் பஹாரியாவை மட்டுமே காதலித்தேன். அதன் பிறகு நான் யாரையும் காதலிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் சாரா. 2016ம் ஆண்டில் சாரா, வீர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அவர்கள் மோதிரம் மாற்றிக் கொண்டதாக கூட கூறப்பட்டது. ஆனால் 2017ம் ஆண்டில் அவர்கள் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.


Click it and Unblock the Notifications











