twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடைகளை கழட்டி நடித்தது எனக்கு தப்பா தெரியல...அமலா பால் சொன்ன ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட் பதில்!

    |

    சென்னை: சரியான டீம் அமைந்தால் திரைப்படம் தயாரிப்பது என்பது கஷ்டமான வேலை இல்லை என்று கூறியுள்ளார் நடிகை அமலா பால்.

    நடிகை அமலா பால் தயாரித்து, நடித்துள்ள கடாவர் திரைப்படம், டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இது குறித்து நடிகை அமலா பால் ஃபிலீமி பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    ராக்கெட்டா போகும்னு பார்த்தா.. எல்லாமே புஸ்வாணமா ஆகிடுச்சே.. கால் அழகியை கலாய்த்த காம்பெட்டிட்டர்! ராக்கெட்டா போகும்னு பார்த்தா.. எல்லாமே புஸ்வாணமா ஆகிடுச்சே.. கால் அழகியை கலாய்த்த காம்பெட்டிட்டர்!

    பிரபுசாலமன் படத்தை கூட தயாரிப்பேன்

    பிரபுசாலமன் படத்தை கூட தயாரிப்பேன்

    கேள்வி: இந்த படப்பிடிப்பில் நீங்கள் அழுது உள்ளீர்கள். எதனால்?

    பதில்: இந்த திரைப்படம் , டெட்பாடிஸ் சம்பந்தப்பட்ட படம். இந்த படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரமானது உள்ளுக்குள் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தாத கதாபாத்திரம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காட்சியில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது தான், எனக்கு அழுகை வந்து விட்டது. இது குறித்து அவர் கூறுகையில், தயாரிப்பு என்பது கடினமானது அல்ல. ஆனால் சரியான டீம் அமைய வேண்டும். எனக்கு கடைசி நேரத்தில் தான் சரியான டீம் இந்த படத்திற்கு அமைந்தது. இது மாதிரியான டீம் எனக்கு அமைந்தால், என்னை அறிமுகப்படுத்திய மிகப்பெரிய இயக்குநர் பிரபுசாலமன் படத்தை கூட நான் தயாரிக்க தயாராக உள்ளேன். அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் நான் செய்த பெரும் பாக்கியம் என்றார்.

    அப்பாவை பின் பற்றும் அமலா பால்

    அப்பாவை பின் பற்றும் அமலா பால்

    கேள்வி: உங்கள் அப்பா குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: இறப்பு என்பது ஒரு Unknown World. கடாவர் படமானது அந்த மாதிரியான உலகத்திற்கு அழைத்து செல்லும். நமக்கு நெருங்கினவர்கள் இறக்கும்போது தான் எமோஷனை நம்மால் உணர முடியும். எங்க அப்பா இறந்தபோது தான், அதை நான் உணர்ந்தேன். இந்த படத்திற்காக எங்க அப்பாவும், அம்மாவும் முதலீடு செய்திருக்கிறார்கள். அப்பாவின் ஆசி இருந்ததால் மட்டுமே, பல சிக்கல்களுக்கு இடையே கடாவர் படம், டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. நான் எப்போதும் தைரியமாக வாழ வேண்டும் என்பது தான் அப்பாவின் அறிவுரை என்று கூறினார் அமலா பால்.

    நடிகையின் கேரக்டரை தீர்மானிக்கிறார்கள்

    நடிகையின் கேரக்டரை தீர்மானிக்கிறார்கள்

    கேள்வி: விக்டிம் படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: ஒரு கதாபாத்திரம் நமக்கு 100 சதவீதம் பிடித்தால் மட்டுமே, நாமும் 100 சதவீதம் உழைக்க முடியும். அது போல் தான் விக்டிம் படத்தில் எனது கதாபாத்திரம். இயக்குநர் வெங்கட்பிரபு படத்தின் ஸ்கிரிப்ட்டை எனக்கு அனுப்பினார். அதில் நான் வெளியே சென்று வீட்டுக்கு வந்தவுடன், ஆடைகளை களைகின்ற சீன் தான் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எனக்கு தப்பா தெரியல. ஏனென்றால் எல்லோரும் வீட்டிற்கு வந்தவுடன் Free ஆக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அது போல் தான் அந்த கதாபாத்திரமும் ரியாலிட்டியாக இருக்க வேண்டும் என்று கருதினோம். இது மாதிரியான காட்சிகளில் நடிக்கும்பொழுது, இங்கு நடிகையின் கேரக்டர் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் அப்படி யாரும் தீர்மானிப்பதில்லை. கதைக்கு என்ன தேவையோ அதை செய்கிறார்கள். எதார்த்தமான சினிமாவைத் தான் அவர்கள் எடுக்கிறார்கள். அங்கு அனைத்து சுதந்திரமும் கொடுக்கப்படுகிறது. ஆனால் இங்கு குறைந்த அளவு மட்டுமே சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு இது மாதிரியான படங்கள் தான் பார்க்க பிடிக்கும்.

    தமிழுக்கு முக்கியத்துவம் தருவேன்

    தமிழுக்கு முக்கியத்துவம் தருவேன்

    கேள்வி: தற்போது நீங்கள் ஏன் அதிகமான மலையாள படங்களில் நடிக்கிறீர்கள்?

    பதில்: 2020, 2021ம் ஆண்டுகளில் நான் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. எனக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வுக்கு பிறகு நான் நடிக்க வரும்போது தான் மலையாள படங்களில் நடித்தேன். ஏனென்றால் அவுட்டோர் படப்பிடிப்பு, வீட்டு சாப்பாடு, மொழி போன்றவை அனைத்தும் எனக்கு அருகில் இருந்ததால் தான் மலையாள படங்களில் நடித்தேன். தற்போது தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறேன் என்றார்.

    கேள்வி: நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படங்களை வரிசைப்படுத்தி கூறுங்கள்...

    பதில்: நான் தமிழில் நடித்த மைனா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் சினிமா என்றால் என்ன என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்த படம். பிறகு பத்ரா, காமினி, ஆடை மற்றும் நான் நடித்த இந்தி படங்களும் பிடிக்கும் என்றார்.

    உண்மையாக இருப்பதில்லை

    கேள்வி: உங்களுடைய அடுத்த இலக்கு?

    பதில்: நான் எப்போதும் 'Going with Flow' என்பது போல் செல்வேன். தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். நான் 2019ல் நடித்த அதோ அந்த பறவை படம் வெளிவர இருக்கிறது. மீடியாவில் வரும் செய்திகள் பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை. தான் தனது ரசிகர்களுடன் இன்ஸ்ட்கிராமில் தொடர்பில் இருந்து வருவதாகவும், அது மட்டுமே உண்மை என்று கூறினார் அமலா பால். இந்த பேட்டியின் முழு வீடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/lqa3KqGOG3U இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். நடிகை அமலா பால் பல விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளார்.

    English summary
    I don't care about acting without dress, Amala Paul's straight forward answer
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X