முத்தக்காட்சியில் நடிக்கிறது எல்லாம் எனக்கு பிரச்சனையே இல்ல.. இரவின் நிழல் சினேகா சொல்றத பார்த்தீங்களா?

சென்னை: இயக்குநர் பார்த்திபனுக்கு நமது நடிப்பு பிடித்து விட்டால் போதும், படத்தில் திறமையாக நடித்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது என்று கூறியுள்ளார் இரவின் நிழல் சினேகா.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் நான் நடித்தது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றும் கூறியுள்ளார் நடிகை சினேகா.

இது குறித்து அவர் பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

முதல் படம் முதல் அனுபவம்

முதல் படம் முதல் அனுபவம்

கேள்வி: இரவின் நிழல் படத்தில் நடிக்க வாய்ப்பு எப்படி கிடைத்தது?
பதில்: நான் நடிக்கும் முதல் படம் இரவின் நிழல். இந்த படமானது சிங்கிள் ஷாட்டாக அமைந்தது பெரிய விஷயம். இது ஒரு சிறந்த அனுபவம். இந்த மாதிரியான வாய்ப்பு இனி கிடைக்குமா என்பது எனக்கு தெரியாது. Non - Linear படம் என்பது கூடுதல் சிறப்பு. 90 நாட்கள் பயிற்சி எடுத்து படப்பிடிப்பு நடத்தினோம். இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் நினைத்திருந்தால், பெரிய ஆர்ட்டிஸ்ட் வைத்து படத்தை எடுத்திருக்கலாம். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த பார்த்திபனுக்கு நன்றி. ஆடிஷன் போது பார்த்திபனுக்கு நமது நடிப்பு பிடித்து விட்டால் போதும் , படத்தில் திறமையாக நடித்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதுவே ஜெயித்தது என்றார்.

ரொம்ப பயமா இருந்தது

ரொம்ப பயமா இருந்தது

கேள்வி: படப்பிடிப்பின்போது நீங்கள் அடைந்த சிரமங்கள் என்ன?
பதில்: முதலில் எனக்கு இரவின் நிழல் படமானது Single Shot படம் என்று தெரியாது. கொஞ்சம் நாள் கழித்து தான் பார்த்திபன் விளக்கினார். படத்தில் நடித்த அனைவரும், தங்களுடைய நடிப்பினால் இந்த படம் நின்று விடக்கூடாது என்ற பயம் அனைவரிடமும் இருந்தது. என்ன காரணம் என்றால், 94 நிமிடங்கள் நடித்து கடைசி நிமிடத்தில் சொதப்பினால், திரும்ப 94 நிமிடங்கள் படம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இயக்குநர் பார்த்திபன் எப்போதும் வித்தியாசமாக படம் எடுக்கக்கூடியவர். அதுமட்டுமின்றி இப்படத்திற்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரகுமான்.

எனக்கு சகோதரர் மாதிரி

எனக்கு சகோதரர் மாதிரி

கேள்வி: அதிகமான முத்தக்காட்சிகளில் நடித்தது குறித்து....
பதில்: இரவின் நிழல் படத்தில் பார்த்திபனின் இளமைக்கால நடிகராக நடித்தவர் சந்துரு. உண்மை சொல்ல வேண்டுமென்றால், இவர் எனக்கு பிரதர் மாதிரி. கோவிட்19 விதிமுறைகளை பின்பற்றி, பார்த்திபனின் காதலியாக இவருடன் ரொமான்ஸ் மற்றும் முத்தக்காட்சிகளில் நடித்தேன். இயக்குநர் பார்த்திபன் கூறும்போது, சுவரை பார்த்து நடிக்கும்போது கூட ரொமான்ஸ் இருக்க வேண்டும். இங்கு நடிப்பது மட்டும் தான் நம் வேலை என்றும் கூறினார். இதனால் சந்துருவுடன் நடிப்பது எனக்கு சௌகரியமாக இருந்தது. சந்துரு ரொம்ப நல்ல மனிதர் என்றார்.

ட்ரீம் படம்

ட்ரீம் படம்

கேள்வி: படத்தில் இடம்பெற்றுள்ள டாட்டூ குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: வழக்கமான படமாக இருந்தால், நாம் நடிக்கும் காட்சிகளை மானிட்டரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். நான் டாட்டூ போட்டுக் கொண்டு, வெள்ளை சேலையுடன் நான் வரும் காட்சியானது ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையில் பார்க்கும்பொழுது. எனது ட்ரீம் படமாக அமைந்தது. சின்ன படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறேன். வித்தியாசமான பார்வையில் திரைக்கதை அமைக்கும் இயக்குநர் பார்த்திபன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் நான் நடித்தது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

இந்த மாதிரி கதைக்கு தான் வெயிட்டிங்

கேள்வி: நீங்கள் எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?
பதில்: இயக்குநர் சேரனின் ஆட்டோகிராப் உள்பட பல படங்களில் ஆண்கள் பல பெண்களை காதலிப்பது போன்று படங்கள் வந்துள்ளன. இதை உடைத்து ஒரு பெண் பல ஆண்களை காதலிப்பது போன்ற கதை அமைந்தால், அந்த படங்களில் கண்டிப்பாக நடிப்பேன் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/HR1FcTuAqg8 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X