எனக்கு நடந்தது என் குழந்தைக்கு நடக்கவே கூடாது: சமந்தா

By Siva

ஹைதராபாத்: தனக்கு நடந்தது தன் பிள்ளைக்கு நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் சமந்தா.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது. படத்தில் சமந்தா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமந்தா, தனது கணவர் நாகசைதன்யாவுடன் சேர்ந்து நடித்த மஜிலி படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

நாகசைதன்யா

நாகசைதன்யா

திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி ஜோடி சேர்ந்து நடித்துள்ளதால் மஜிலி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.

தாய்

தாய்

நான் தாயான பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பேன். என் குழந்தை தான் என் உலகமாக இருக்கும். நான் குழந்தையாக இருந்தபோது பிரச்சனைகளை சந்தித்தேன். எனக்கு நடந்தது போன்று என் குழந்தைக்கும் நடக்க விட மாட்டேன். அதனால் நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பேன் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

திட்டம்

திட்டம்

எப்பொழுது குழந்தை பெற வேண்டும் என்று குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்து வைத்துள்ளதாக சமந்தா முன்பே தெரிவித்தார். அந்த நேரம் எப்பொழுது என்பதை மட்டும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

குடும்பம்

குடும்பம்

திருமணத்திற்கு பிறகும் சமந்தா கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதால் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார். ஆனால் அவரின் கணவருக்கோ, குடும்பத்தாருக்கோ பிரச்சனை இல்லாதபோது யார் விமர்சித்தால் என்ன என்று தைரியமாக உள்ளார் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X