For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என் ரசிகர்களை இழக்க விரும்பல.. கிராமத்து படங்களில் நடிப்பது குறித்து சசிகுமார் கொடுத்த விளக்கம்!

  |

  சென்னை: செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள படம் நான் மிருகமாய் மாற. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் , டீசர் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

  கன்னட திரைப்பட நடிகை ஹரிப்பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரத்தம் உறைய வைக்கும் கொலை குற்றவாளியாகவும், சைக்கோ வில்லனாகவும் நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார்.

  இந்நிலையில் நடிகர் சசிகுமார் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

  நடிகர் அப்பாசுக்கு திடீர் அறுவை சிகிச்சை..என்ன ஆச்சு..பதறிய ரசிகர்கள்!நடிகர் அப்பாசுக்கு திடீர் அறுவை சிகிச்சை..என்ன ஆச்சு..பதறிய ரசிகர்கள்!

   ஜூம் மீட்டிங்

  ஜூம் மீட்டிங்

  கேள்வி: நான் மிருகமாய் மாற படத்தில் நடித்தது குறித்து...

  பதில்: கழுகு, சவாலே சமாளி உள்ளிட்ட படங்களை இயக்கிய சத்யசிவா, கொரோனா லாக்டவுனின்போது ஜூம் மீட்டிங்கின் மூலம் நான் மிருகமாய் மாற படத்தின் கதையை கூறினார். சவுண்ட் இன்ஜினியர் வாழ்க்கையில் ஏற்படும் கதை என்றும், நகரத்தை மையமாக கொண்டு கதை நகருவதாகவும் தெரிவித்தார். நான் இயக்குநராக பணியாற்றும்பொழுது, சவுண்ட் இன்ஜினியர்களுடன் பழகியுள்ளேன். அதனால் இந்த கதையில் நடிக்கலாம் என்று முடிவு செய்து நடித்தேன் என்றார்.

   பாடல் இல்லாததால் நஷ்டம்

  பாடல் இல்லாததால் நஷ்டம்

  கேள்வி: நான் மிருகமாய் மாற படத்தில், பாடல்கள் இல்லை... அது குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: படம் முழுவதும் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கலந்து பயணிக்கும். முதலில் இருந்து கடைசி வரை எந்த இடத்திலும் நான் சிரிக்க மாட்டேன். முழுவதும் ஆக்ஷன் படம் என்பதால் இந்த படத்தில் பாடல்கள் கிடையாது. என்னை பொறுத்தவரை இது புதுமையாக இருந்தாலும், தயாரிப்பாளருக்கு இந்த சமயத்தில் நான் நன்றி கூறுகிறேன். ஏனென்றால் தற்பொழுது உள்ள காலக்கட்டத்தில் பாடல் ஆடியோ வெளியீடு, அதற்கான உரிமம் போன்றவற்றை வைத்து வருவாய் கிடைக்கும். பாடல் இல்லாமல் நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்து இந்த திரைப்படத்தை ராஜா தயாரித்துள்ளார் என்றார்.

   ஜல்லிக்கட்டு

  ஜல்லிக்கட்டு

  கேள்வி: உங்களது அடுத்த படமான காரி திரைப்படம் குறித்து...

  பதில்: காரி திரைப்படமானது கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு தொடர்பான படம். இப்படத்தில் பல்வேறு வகையான மாடுகளும், குதிரைகளும் இடம்பெற்றுள்ளன. காரி என்ற மாட்டு இனத்திற்கும், எனக்கும் உள்ள கதை தான் காரி திரைப்படம். மிக அருமையாக வந்துள்ளது என்றார்.

   எனது பேக்கிரவுண்ட்

  எனது பேக்கிரவுண்ட்

  கேள்வி: நீங்கள் கிராமப்புற கதைகளில் நடிக்க என்ன காரணம்?

  பதில்: நான் திரையுலகில் நுழைந்தபோது எனக்கு பி மற்றும் சி பிரிவு ரசிகர்கள் ஆதரவு தந்தனர். நான் எதையும் பிளான் செய்வது கிடையாது. அது தானாக நடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் எனது பெரும்பாலான படங்கள் கிராமத்தை மையமாக கொண்டு வந்துள்ளது. அதில் சில படங்கள் வெற்றியும், தோல்வியும் சந்தித்துள்ளன. கிராமம் தொடர்பான கதைக்களம் தான் எனது பேக்கிரவுண்ட். அதை நான் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன். மேலும் படப்பிடிப்பிற்காக நாங்கள் கிராமத்திற்கு செல்லும்பொழுது, கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு பிள்ளையாகவே என்னை பார்க்கின்றனர். படப்பிடிப்பின்போது போட்டோ எடுக்க வேண்டாம் என்று நான் கூறினால், அவர்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த ரசிகர்களை நான் எப்பொழுதும் இழக்க விரும்பவில்லை என்றார்.

  குடும்பத்துடன் இருக்கிறேன்

  கேள்வி: நீங்கள் தற்பொழுது சொந்த ஊரில் வசிக்க என்ன காரணம்?

  பதில்: முதலில் படங்கள் தயாரித்து வந்த காரணத்தினால் சென்னையில் இருந்து வந்தேன். தற்பொழுது படங்கள் தயாரிப்பதில்லை. மலையாள சினிமாத்துறையில் உள்ள பெரும்பாலான இயக்குநர்கள், நடிகர்கள் ஆகியோர் அவரவர் கிராமங்களில் வசிக்கின்றனர். படப்பிடிப்பின்போது மட்டும் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிக்கு செல்கின்றனர். நானும் தற்போது எனது சொந்த ஊரில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகின்றேன். படப்பிடிப்பின்போது மட்டும் செல்கிறேன் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=Hse7AN1IVGw இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

  English summary
  Actor Sasikumar's Naan Mirugamai Maara is produced by Senthoor Films International and directed by Satyasiva. The first and teaser of this film received good response from the fans. Kannada film actress Haripriya plays the lead role. And actor Vikrant has played the role of a blood curdling murderer and psycho villain. In this case, actor Sasikumar gave a special interview to our filmibeat channel here.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X