twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive : திறமை இருந்தால் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது: ‘தொரட்டி’ நாயகி சத்யகலா

    தொரட்டி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார் சத்யகலா.

    |

    சென்னை :திறமை இருந்தால் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என தொரட்டி படம் மூலம் அறிமுகமாகியுள்ள நடிகை சத்யகலா தெரிவித்துள்ளார்.

    1980களில் ராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம் 'தொரட்டி'. இந்த திரைப்படத்தை ஷமன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

    மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தின் நாயகனாக ஷமன் மித்ருவும், நாயகியாக சத்யகலாவும் அறிமுகமாகியுள்ளனர்.

    இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கையைக் கதைக்களமாகக் கொண்ட இப்படம் நிச்சயம் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் எனக் கூறுகிறார் நாயகி சத்யகலா.

    மேலும் இது தொடர்பாக ஒன்இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

    தொரட்டி வாய்ப்பு:

    தொரட்டி வாய்ப்பு:

    பொள்ளாச்சி தான் என்னுடைய சொந்த ஊர். நான் சில குறும்படங்களில் நடித்திருக்கிறேன். எனது நண்பர் ஒருவர் மூலமாக தொரட்டி படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டேன். என்னை பார்த்ததும் இயக்குனர் ஓகே சொல்லிவிட்டார். இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியாக இருப்பேன் என இயக்குனர் நம்பியதால் தான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளார்.

    நன்றிக்கடன்:

    நன்றிக்கடன்:

    தொரட்டி படம் மூலமாக அறிமுகமாவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு இந்த வாய்ப்பை அளித்த படத்தின் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    நம்பிக்கை:

    நம்பிக்கை:

    தொரட்டி படத்துக்காக நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். அந்த கஷ்டங்களுக்கு எல்லாம் பலன் கிடைக்கும் என நம்புகிறேன். நான் மட்டுமல்ல, இந்த படத்தில் வேலை செய்த அனைவரும், மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். வெற்றிக்காக காத்திருக்கிறோம்.

    பயம்:

    பயம்:

    படத்தில் நான் நடித்த முதல் காட்சியே நாவல் மரத்தில் ஏறி பழம் பறிப்பது தான். என்னை மரத்தில் ஏற்றிவிட்டுவிட்டு, எல்லோரும் நகர்ந்துவிட்டனர். அது மிக உயரமான மரம் என்பதால், முதலில் பயமாக இருந்தது. அதை வெளிகாட்டாமல் அந்த காட்சியில் நடித்து முடித்தேன். அந்த காட்சியை இப்போது திரையில் பார்க்கும் போது தான் அதன் மதிப்பு தெரிகிறது.

    கடின உழைப்பு:

    கடின உழைப்பு:

    தொரட்டி நிச்சயம் வெற்றிப்படமாக அமையும். ஏனென்றால் எல்லோருமே அவ்வளவு உழைப்பை கொடுத்திருக்கிறோம். இந்த படத்தின் பாடல்களும் காட்சிகளும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும்.

    சினிமா ஆசை:

    சினிமா ஆசை:

    எனக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது. ஒரு ஆசையால் இங்கு வந்துவிட்டேன். மற்றபடி இந்த துறை எப்படிப்பட்டது என்பது எனக்கு தெரியாது.

    பிரச்சினையில்லை:

    பிரச்சினையில்லை:

    தொரட்டி படத்தை பொறுத்தவரை இதில் வேலை பார்த்த எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான். அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நல்ல திறமை இருக்கும் போது அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என நான் நினைக்கிறேன்" என இவ்வாறு நடிகை சத்யகலா கூறினார்.

    English summary
    The Thoratti movie heroine Sathyakala said that if there is talent, then actress don't need to sexually adjust with anyone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X