விஜய் மகனை டேட் பண்ணல.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளம் நடிகை.. தளபதியுடன் நடிச்சிருக்காரே!
சென்னை: விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா, புலி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை ரவீனா தாஹா. ராட்சசன், எனிமி மற்றும் பிட்சா 3 உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். மெளனராகம் 2 சீரியலில் நடித்து பிரபலமான ரவீனா தற்போது இளம் நடிகையாக படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விஜய் மகனை டேட் செய்கிறேன் என்கிற ரூமர் அதிகம் பரவியது. ஆனால், அதெல்லாம் வெறும் வதந்தி தான் பாஸ் என ஓபனாக பேசியுள்ளார்.

ஆனால், விஜய் மகனுடன் சேர்ந்து அந்த விஷயத்தை மட்டும் பண்ண வேண்டும் என்கிற தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படையாக பேசிய நிலையில், அவரது பேட்டி வைரலாகி வருகிறது.
இயக்குநரான விஜய் மகன்: லைகா தயாரிப்பில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் டைரக்டராக மாறியுள்ளார். சந்தீப் கிஷனை வைத்து சிக்மா எனும் படத்தையும் எடுத்து முடித்துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிக்மா திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், நடைபெற்ற ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கு அவரது மனைவி மற்றும் மகன் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் வராதது சமூக வலைதளத்தில் மீண்டும் விவாதங்களையும் வதந்திகளையும் கிளப்பி உள்ளன.

விஜய் மகனை டேட் பண்ணல: சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீனா தாஹா சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ளார். தளபதி விஜய்யுடன் ஜில்லா மற்றும் புலி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்த நிலையில், விஜய் மகனான ஜேசன் சஞ்சயை இவர் டேட் செய்வதாக வதந்திகள் பரவியது என்றும் ஆனால், அதெல்லாம் உண்மை கிடையாது. விஜய் மகனுடன் நடிக்க ஆசை என தான் பேசியதை அப்படியே திரித்து வதந்தியாக மாற்றிவிட்டனர்.

விஜய்க்கு ஜோடியா நடிக்க முடியாது: தளபதியை எனக்கு ரொம்பவே பிடிக்கும், அவருக்கு ஜோடியா நடிக்க முடியாது. அட்லீஸ்ட் அவர் பையன் சினிமாவில் ஹீரோவானால் அவருக்கு ஜோடியா நடிக்கலாமேன்னு பேசியதை இப்படி எழுதிட்டாங்க. அதை எல்லாம் பார்த்து அப்படியே சிரித்து விட்டு கடந்து விடுவேன் எனக் கூறியுள்ளார். இப்போதைக்கு சினிமாவில் பிசியாக இருப்பதால் சீரியல் பக்கம் மீண்டும் செல்ல மாட்டேன் எனக் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக இருந்த ரவீனா தாஹா 91 நாள் வரை அந்த வீட்டில் தாக்குப்பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











