எனக்கு இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது டாக்டர் பட நாயகி பிரியங்கா எத சொல்றாங்க?

சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகன் தற்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். திரையரங்குகளில் தற்போது டாக்டர் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.

Recommended Video

Actress Priyanka Mohan Exclusive | Makeup ரொம்ப விரும்ப மாட்டேன் | Doctor Movie | Filmibeat Tamil

இவரைப்போன்று தெளிவாக சரியாக தமிழ் பேசும் நடிகைகளை இன்றைய தமிழ் சினிமா பார்ப்பதே அரிதாக உள்ளது. டாக்டர் படம் பார்த்த பிறகு, இன்றைய இளைஞர்களின் கனவுக்கன்னியாக நிச்சயம் வலம் வரப்போகிறார் என்பது மட்டும் உறுதி.

சமீபத்தில் வெளிவந்த படங்களுடன் ஒப்பிடும் போது டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பையும்,நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடம்

அடுத்தபடம்

சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் ஒப்பந்தம் ஆகி நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பது ரசிகர் மத்தியில் மேலும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா டாக்டர் படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, " சூர்யா 40" படத்தில் நடிக்கிறார். இதுவரை பகிர்ந்து கொள்ளாத விஷயங்களை, டாக்டர் படக்குழுவினை, அங்கு நடந்த நிகழ்வுகளை நமக்காக சொல்கிறார் பிரியங்கா.

சிவகார்த்திகேயன் பேவரிட்

சிவகார்த்திகேயன் பேவரிட்

கேள்வி : சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன?

பதில் : சிவகார்த்திகேயனுக்கு சாக்லெட்ஸ், ஸ்வீட்ஸ்-ன்னா ரொம்ப பிடிக்கும். ஷூட்ல நிறைய தடவை நிறைய ஸ்வீட்ஸ் ஒன்னா சாப்பிட்டோம்.ரொம்ப கலகலபான ஹீரோ.எப்பவும் ஷூட்டிங் ஸ்பாட்ல ஆக்ட்டிவா இருப்பாரு.அவரை பாத்து நெறைய கத்துக்கணும்.

நல்ல காஸ்ட்டியூம்

நல்ல காஸ்ட்டியூம்

கேள்வி : டாக்டர் படத்தில் உங்கள் சிறப்பான காஸ்ட்யூம்க்கு காரணம் என்ன?

பதில் : பல்லவிதான் ஒரே காரணம். எனக்கு என்ன செட் ஆகும்.. எது செட் ஆகாதுன்னு மிகச்சரியா சொல்வாங்க. அவங்களுக்கு ரொம்ப நன்றிய சொல்லிக்கிறேன். எது மிக பொருத்தமானதுன்னு கரெக்ட்டா கெஸ் பன்னுவாங்க. அவங்க ட்ரஸிங் சென்ஸ் ரொம்பவே எனக்கு புடிக்கும். நிறைய கத்துக்கிட்டேன் அவங்க கிட்ட.

ரொம்ப மேக் அப் பிடிக்காது

ரொம்ப மேக் அப் பிடிக்காது

கேள்வி : வழக்கமா சினிமா பாடல்கள்-ன்னாவே எக்கச்சக்கமா மேக்கப் போடுவாங்களே? நீங்க எப்படி?

பதில் : எனக்கு நிஜமாவே அதிகமான மேக்கப் போடுறது பிடிக்காது. பார்க்க அழகா இருக்கனும். அவ்ளோதான். அதுக்காக ரொம்ப அதிகமா மேக்கப் போடாம, சிம்பிளா அழகான மேக்கப் போடுறதுதான் என் வழக்கம்.என்று பேரழகாய் நின்ற பிரியங்கா நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

வெற்றிப்படம் டாக்டர்

வெற்றிப்படம் டாக்டர்

டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரியங்கா டான்,எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.டாக்டர் படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்ததனால் கண்டிப்பாக இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று எதிர்பார்க்கலாம் .இது போல் சுவாரஸ்யமான பேட்டிகள் மற்றும் டாக்டர் பட குழுவினர் மற்றும் பிரியாங்காவின் வீடியோக்களை ஃபிலிம்பீட் யூ டியூப் தளத்தில் காணலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X