Exclusive: 'படத்த பார்த்துட்டு பிரெண்ட்ஸ் கூட என்கிட்ட பேசல'... பரியேறும் பெருமாள் வில்லன் லிஜீஷ்!

பரியேறும் பெருமாள் படத்தின் வில்லன் நடிகர் லிஜீஷ் ஒன்இந்தியாவிற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

சென்னை: பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த பிறகு தன் நண்பர்கள் கூட தன்னிடம் பேசவில்லை என நடிகர் லிஜீஷ் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கில், கதிர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் பரியேறும் பெருமாள். இந்த படம் கடந்த வாரம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நம் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்து, அனைவரது கோபத்துக்கும் ஆளாகியிருப்பவர் நடிகர் லிஜீஷ். ஆதிக்க சாதி மனதின் அட்டூழியங்களை திரையில் கொண்டுவந்தவரை ஒன்இந்தியாவிற்காக சந்தித்தேன்.

ஒன்இந்தியாவிற்கு அவர் அளித்த பேட்டி:

பரியேறும் பெருமாள் ஸ்கிரிப்ட்

பரியேறும் பெருமாள் ஸ்கிரிப்ட்

பரியேறும் பெருமாள் படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்ததுமே இந்த படம் சூப்பராக வரும் எனத் தெரிந்தது. இந்த படத்தில் நான் செய்த ரோலை பார்த்த பிறகு நிச்சயம் எனக்கு மக்களிடம் இருந்து திட்டுவிழும் என தெரியும். நான் நினைத்தது போலவே தான் நடந்திருக்கிறது.

கடுமையாக திட்டுகிறார்கள்

கடுமையாக திட்டுகிறார்கள்

ஆணவக் கொலை செய்கிற கேரக்டரில் நடித்த கராத்தே வெங்கடேஷை கூட மன்னித்துவிட்டார்கள். ஆனால் என்னை தான் கடுமையாக திட்டுகிறார்கள். படத்தில் கடைசி வரை நான் சமாதானம் ஆகாமல் இருந்ததால், என் மீது தான் அதிக ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது.

தங்கராஜ் காலில் விழுந்தேன்

தங்கராஜ் காலில் விழுந்தேன்

கதிரின் அப்பாவை மானபங்கப்படுத்தும் காட்சியில் நடித்தது மிகவும் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. அந்த காட்சியை எடுத்து முடித்தப் பிறகு நான் தங்கராஜ் அண்ணன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டேன். ஆனால் கூட நடித்த பொண்ணுங்க எல்லாம் என் கூட பேசவே இல்லை. படப்பிடிப்பில் இருந்த எல்லோருமே அழுதோம். அந்த காட்சிக்கு பிறகு நானும் தங்கராஜ் அண்ணணும் மிகவும் நெருக்கமாகிவிட்டோம்.

பருத்திவீரனுக்கு பிறகு

பருத்திவீரனுக்கு பிறகு

பருத்திவீரனுக்கு பிறகு இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்றால் அது பரியேறும் பெருமாள் தான். இந்த படத்தை மக்கள் தங்களுடைய மனதுக்குள் ஏற்றுக்கொண்டார்கள் என்பது தான் பிரச்சினை. என்னை வில்லானவே பார்க்க ஆரம்பித்துவிட்டார். படம் பார்த்துவிட்டு, என் நண்பர்கள் கூட என்னிடம் பேசவில்லை. அந்த அளவுக்கு ஒரு பெரிய தாக்கத்தை படம் ஏற்படுத்தியிருக்கிறது.

கதிரிடம் நிஜமாகவே அடிவாங்கினேன்

கதிரிடம் நிஜமாகவே அடிவாங்கினேன்

பரியேறும் பெருமாள் படத்தில் கதிரின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. இறுதி சண்டைக் காட்சியில் கதிர் என்னை நிஜமாகவே அடித்துவிட்டார். பிறகு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, சாரி கேட்டார். அந்தளவுக்கு படத்தின் சண்டைக்காட்சிகள் எல்லாம் தத்ரூபமாக அமைந்துவிட்டது.

வில்லன் அடையாளம்

வில்லன் அடையாளம்

பரியேறும் பெருமாள் கொடுத்துள்ள இந்த அடையாளத்துடன் வில்லனாகவே தொடர விரும்புகிறேன். வில்லனாக நடிப்பதற்கு நிறைய மெனக்கெடனும். ரகுவரன் போல் ஒரு வில்லனாக அறியப்பட வேண்டும். இதுதான் என் விருப்பம்" என அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X