அப்பா தோற்றத்தில் இருக்கும் ஒரு ஆண் மீது காதல்... இயக்குநர் ரத்னகுமார் சொல்லும் சுவாரஸ்யங்கள்

சென்னை: நடிகர்களின் ஒத்துழைப்பு காரணமாக 55 நாள் எடுக்க வேண்டிய படத்தை 47 நாட்களில் எடுத்து முடித்தோம் என்று "குலுகுலு" படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நடிகர் சந்தானம் என்னை முழுவதுமாக நம்பினார். அதனால் படம் சிறப்பாக வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இது குறித்து இயக்குநர் ரத்னகுமார், நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

கோமா நிலையில் இருந்தேன்

கோமா நிலையில் இருந்தேன்

கேள்வி: உங்களுடைய திரைப்பயணம் குறித்து....

பதில்: நான் மதராஸ் கிறிஸ்டின் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்தேன். எங்க பேட்ச்சில் படித்த அனைவரும் மிடியாவுக்கு வந்து விட்டார்கள். நான் கடந்த 5 வருடமாக தான் சினிமாவில் இருக்கிறேன். என்கூட இருந்தவர்கள் எல்லாம் சினிமாத்துறையில் வெவ்வேறு நிலைகளில் இருக்கும்போது, நான் கோமா நிலையில் தான் இருந்தேன் என்று சிரித்தபடி பேசினார் ரத்னகுமார் .

Fire Gun போஸ்டர்

Fire Gun போஸ்டர்

கேள்வி: சந்தானம் Fire Gun உடன் இருக்கும் காட்சியானது, விக்ரம், கைதி ,kgf , ராக்கி , போன்ற படங்கள் மாதிரி அமைய வேண்டும் என்று நோக்கத்தில் வைக்கப்பட்டதா?

பதில்: இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் வாங்கியிருக்கிறது என்பதை தெரியப்படுத்துவதற்காக மட்டுமே நடிகர் சந்தானம் Fire Gun உடன் இருக்கும் போஸ்டரை வெளியிட்டோம். இந்த காட்சி மட்டுமின்றி எங்களுக்கு பிடித்த காட்சிகள் நிறைய படத்தில் இருக்கிறது. மேலும் படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் Fun ஆக இருக்கும். வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது .

20 நிமிடம் கதை கேட்டார்

20 நிமிடம் கதை கேட்டார்

கேள்வி: நடிகர் சந்தானம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: ஒரு படத்தில் நடிக்கிற ஆர்ட்டிஸ்ட் முதலில் முழுவதுமாக எங்களை நம்பி அவர்களை ஒப்படைக்கணும். ஆர்ட்டிஸ்ட் இன்வால்வ்மென்ட் இல்லாம படம் நன்றாக வராது. ஆர்ட்டிஸ்ட்க்கு கதை மற்றும் கதாபாத்திரம் மீது சந்தேகம் வந்தால் படம் நன்றாக வராது. மேலும் ஆர்ட்டிஸ்ட்க்கு தகுந்த மாதிரி நாம் சின்ன, சின்ன விஷயங்களை மாற்றினால் படம் நாம் நினைத்தது மாதிரி வராது. இந்த படத்தின் கதையை 20 நிமிடம் நடிகர் சந்தானம் பொறுமையாக கேட்டார். அவர் என்னை முழுவதுமாக நம்பினார். மேலும் இப்படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் எங்களை நம்பினர். மேலும் அவர்களின் முழு ஒத்துழைப்பு காரணமாக 55 நாள் எடுக்க வேண்டிய படத்தை 47 நாட்களில் முடித்துவிட்டோம். படத்தின் டைட்டில் போடும்போது பலர் மற்றும் சந்தானம் நடிக்கும் என்று போடலாம் என்று இருந்தேன். ஏனென்றால் இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரத்திற்கும் ஏதாவது பிரச்னைகள், தேடல் மற்றும் தீர்வுகளும் இருக்கிறது. எல்லா கதாபாத்திரத்துடனும் நடிகர் சந்தானம் பயணிப்பார் என்பது தான் படம்.

ஆங்கிலத்தின் ஏன் இப்படி சில பெயர்கள் ?

ஆங்கிலத்தின் ஏன் இப்படி சில பெயர்கள் ?

கேள்வி: நடிகை அதுல்யாவுக்கு ஏன் ஆங்கிலத்தில் பெயர் வைத்தீர்கள்?

பதில்: நடிகை அதுல்யாவுக்கு முதலில் மதிவதினி என்று தான் பெயர் வைத்திருந்தோம். ஆனால் இக்கதை மாஃபியாவுடன் தொடர்புப்படுத்தி வருவதால், பின்பு அவர்களுக்கு மெட்டில்டா ரோட்ரிக்ஸ் என்று பெயர் மாற்றினோம். ஏனென்றால் பெயரானது கதையுடன் ஒத்து வர வேண்டும் என்பதற்காக தான். மேலும் நடிகை நமீதாவுக்கு வடிவுக்கே அரசி வடிவுக்கரசி என்று பெயர் வைத்தேன். பொதுவாக வடிவுக்கரசி என்ற பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அன்பரே

அன்பரே

கேள்வி: பாடலாசிரியர் விவேக் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: இந்த படத்திற்கு விவேக் பாடல்கள் எழுதியுள்ளார். இந்த நேரத்தில் அவருக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். ஏனென்றால் படவிழாவின் போது அவர் பெயரை நான் குறிப்பிடவில்லை. நான் ஒரு பெண் தன்னோட காதலனை தன் தந்தையை போன்ற அமைய வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த உணர்வின்படி எனக்கு பாடல் வேண்டும் என்று கூறினேன். அவரும் அந்த சூழ்நிலைக்கேற்ப பாடல் எழுதி கொடுத்தார். பாடல் நன்றாக வந்துள்ளது. மேலும் அன்பரே பாடல் மிக பிரமாதமாக வந்துள்ளது என்றார்.

10 ஜன்னல்கள்

கேள்வி: தேசிய விருது பெற்ற ஜாக்கி குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: தேசிய விருது பெற்ற ஜாக்கி ஆர்ட் டைரக்டராக இப்படத்தில் பணிபுரிந்துள்ளார். முதலில் அவரிடம் நான் கதையை கூறினேன். கதை அவருக்கு ரொம்ப பிடித்து விட்டதால், ரொம்ப ஆர்வமாக பணிபுரிந்தார். சொல்லப்போனால் தேவையில்லாத பொருட்களை மட்டுமே வைத்த ஒரு சுவர் ரெடி பண்ணியிருப்பார். என்னை பொறுத்தவரை எண்ணூர் பாலத்துக்கு கீழ் சந்தானம் படுத்திருக்கும் செட் எனக்கு பிடித்திருந்தது. ஏனென்றால் ஒரு வீடு என்றால் அதிக பட்சம் இரண்டு ஜன்னல்கள் இருக்கும். ஆனால் பத்து ஜன்னல் இருக்கிற மாதிரி பழைய பொருட்களை கொண்டு செட் அமைத்து இருப்பார். படத்தில் அளவுக்கு அதிகமான ப்ராபர்ட்டியை பயன்படுத்தியிருப்பார் ஜாக்கி. இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/j-Vwf5Wx8VE இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். இயக்குநர் ரத்னகுமார் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளார் . மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X