சிம்பு சொன்னதை தான் நான் பிக் பாஸ் வீட்டில் செய்தேன்: மகத்

By Siva

Recommended Video

சிம்பு சொன்னதை நான் செய்தேன் : மஹத் வைரல் வீடியோ

சென்னை: என் நண்பன் சிம்பு சொன்னதை தான் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது செய்தேன் என்கிறார் மகத்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்தபோது மகத் தனது காதலி பிராச்சிக்கு துரோகம் செய்தார். பிராச்சி நம்பிக்கையுடன் காத்திருந்தபோது யாஷிகா மீது காதலில் விழுந்தார் மகத்.

இதை பார்த்த பிராச்சி மனமுடைந்து காதலை முறித்தார்.

காதல்

காதல்

மகத் செய்த காரியத்தால் கோபத்தில் இருந்தார் பிராச்சி. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் பிராச்சியை சந்தித்து பேசி சமாதானம் செய்து காதலை புதுப்பித்துவிட்டார் மகத். அந்த பெண்ணும் மகத்தை மன்னித்து அவரை மீண்டும் ஏற்றுக் கொண்டார். இன்ஸ்டாகிராமில் மகத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை நீக்காத போதே பிராச்சி அவரை மன்னித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிராச்சி

பிராச்சி

பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவை பார்த்து காதலை சொன்ன மகத் வெளியே வந்ததும் வேறு மாதிரி பேசுகிறார். அதாவது யாஷிகா மீது ஈர்ப்பு மட்டுமே ஏற்பட்டது என்றும் காதலி என்றால் அது பிராச்சி மட்டுமே என்றும் கூறியுள்ளார். மேலும் யாஷிகாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பேன் என்று நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என்று கூலாக சொல்கிறார் மகத்.

சிம்பு

சிம்பு

மகத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முக்கிய காரணம் அவரது நெருங்கிய நண்பர் சிம்பு என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் சிம்பு சொல்லியபடி தான் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டதாக மகத் தெரிவித்துள்ளார். தான் சொன்னடி நடந்த நண்பன் மகத்தை நினைத்து சிம்பு பெருமையில் உள்ளாராம். இதை மகத்தே தெரிவித்துள்ளார்.

நேர்மை

நேர்மை

நான் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்ததை வீடியோக்கள் போட்டுக் காட்டி சுட்டிக் காட்டினார் சிம்பு. ஆனால் நான் நேர்மையாக நடந்து கொண்டதை பார்த்து அவர் பெருமைப்பட்டார். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது சரி, அங்கு போலியாக இல்லாமல் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சிம்பு சொல்லி அனுப்பி வைத்தார். அவர் சொல்லியபடி தான் நான் நடந்தேன் என்கிறார் மகத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X