மீசை மேட்டர்... பிரசாந்துடன் சண்டைப்போட்டேன்... பிரவீன் காந்தி சுவாரஸ்யம்!

சென்னை : ராட்சகன்,ஜோடி,ஸ்டார் என தொடர் ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்தவர் இயக்குனர் பிரவீன் காந்தி

ஹீரோவாகவும் படங்களில் நடித்து வரும் இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது புலிப்பார்வை என்ற படத்தை இயக்கி வருகிறார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்டார் படம் பண்ணும்போது பிரசாந்துக்கு எனக்கும் கிளாஸ் ஆகிடுச்சு என கூறியுள்ளார்

 இந்தியாவே திரும்பிப் பார்க்கும் பிரம்மாண்ட செலவில்

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் பிரம்மாண்ட செலவில்

தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான நடிகராக உள்ள நாகார்ஜுனா நடிப்பில் மிகப்பிரம்மாண்டமான பொருட்செலவில் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் ரட்சகன். தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக சுஷ்மிதா சென் நடித்திருப்பார. ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

 மாபெரும் வெற்றி பெற்றது

மாபெரும் வெற்றி பெற்றது

அறிமுகமான முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை இயக்கி இந்திய அளவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரவீன் காந்தி அடுத்ததாக பிரசாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி என்ற மற்றுமொரு சூப்பர் ஹிட் வெற்றிப்படத்தை கொடுத்தார். இரு காதலர்கள் இருவேறு குடும்பத்திற்கு இடையே இருக்கும் தடைகளை கடந்து எவ்வாறு இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் இணைகிறார்கள் என்பதே சுவாரஸ்யம் குறையாமல் கூறியிருந்த ஜோடி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்திற்கும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ் மான் இசை அமைத்திருந்தார்.பாலிவுட் பாடல்கள் இப்படத்தில் ரீமேக் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

 ஹீரோவாக அறிமுகமானார்

ஹீரோவாக அறிமுகமானார்

2001ல் பிரவீன் காந்தி மீண்டும் பிரசாந்துடன் இணைந்த திரைப்படம் ஸ்டார். இந்த படமும் பிரவீன்காந்தி, ஏ ஆர் ரஹ்மான், பிரசாந்த் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இவ்வாறு தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த பிரவீன் காந்தி துள்ளல் என்ற படத்தை இயக்கி ஹீரோவாகவும் அறிமுகமானார். நடித்த தொடங்கிய பிறகு மற்ற ஹீரோக்களை வைத்து படங்கள் எதையும் இயக்கவில்லை தற்போது புலிப்பார்வை என்ற படத்தை இயக்கி வருகிறார்

Recommended Video

Andhagan | Prashanth | என் ரசிகர்கள்தான் எனக்கு எல்லாமே | Filmibeat Tamil
 பிரசாந்துக்கும் எனக்கும் க்ளாஷ் ஆயிடுச்சு

பிரசாந்துக்கும் எனக்கும் க்ளாஷ் ஆயிடுச்சு

இவ்வாறு தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனராக உள்ள பிரவீன் காந்தி தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஜோடி படத்திலேயே அஞ்சாதே ஜீவா பாடலுக்கு மீசை வைப்பது குறித்து பிரசாந்துக்கு தனக்கும் வாக்குவாதம் நடந்தது . அதேபோல ஸ்டார் படம் பண்ணும் போதும் பிரசாந்துக்கும் எனக்கும் க்ளாஷ் ஆயிடுச்சு என வெளிப்படையாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X