சேரனை வெறுத்த மீனா.. கிட்டத்தட்ட சண்டைக்கே நின்ற சம்பவம்.. பல ஆண்டுகளுக்குப் பின் மனம் திறந்த மீனா

சென்னை: நடிகை மீனா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகையாக உள்ளார். தனது குழந்தை பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வந்தாலும், தனது கெரியரின் உச்சத்தை தொட்டவர் மீனா. இது மட்டும் இல்லாமல், பல முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய சினிமா முழுவதும் வலம் வந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் சேரன் உடன் அவர் சண்டை போட்டது தொடர்பாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த பேட்டியில் மீனா கூறியதாவது, " நான் இயக்குநர் சேரனின் வெற்றி கொடி கட்டு படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது நான் சேரனிடம் எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் எனது தலைமுடிக்கு கலரிங் செய்து கொண்டு வந்துவிட்டேன். இதைப் பார்த்த சேரனோ, என்னங்க மீனா இப்படி பண்ணீட்டு வந்துட்டீங்க. இது எல்லாம் வேண்டாம், என்னோட வள்ளி இப்படி இருக்க மாட்டா.. இந்த ஹேர் கலரிங் எல்லாம் வேண்டவே வேண்டாம் என்று கூறுகிறார்.

I Hated Him That Day Actress Meena Reveals Her On-Set Clash with Director Cheran

ஆனால் நானோ, சேரன் நான் தான் முழுவதுமாக பின்னி ஜடை போட்டுக் கொள்வேன் அப்படி இருக்கும்போது எதற்காக இவ்வளவு யோசிக்கிறீர்கள், மக்கள் அந்த அளவுக்கு எல்லாம் கவனிக்க மாட்டார்கள் என்று கூறுகிறேன். உடனே அவரோ, மக்கள் கவனிக்கிறார்கள் கவனிக்கவில்லை எனது வள்ளி இப்படி இருக்க மாட்டாள், இப்படி இருக்க கூடாது. எனவே நீங்கள் போய் கருப்பு நிறத்தில் டை அடித்துக் கொண்டு வாங்க என்று கூறுகிறார். கிட்டத்தட்ட சண்டையே போடுகிறார். அவர் அன்றைக்கு நடந்து கொண்டதைப் பார்த்து நான் அவரை வெறுத்து விட்டேன். எனது அம்மா சொன்ன பின்னர் நான் கருப்பு நிற டை அடித்துக் கொண்டேன்" என்று கூறி உள்ளார்.

I Hated Him That Day Actress Meena Reveals Her On-Set Clash with Director Cheran

இயக்குநர் சேரன் இயக்கத்தில் உருவாகி முரளி, பார்த்திபன், மீனா, மனோரமா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் வெற்றி கொடி கட்டு. இந்த படத்தை இன்றைக்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் பார்ப்பதற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். இந்த படம் சமூக பிரச்னையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட சிறந்த படம் என்ற பிரிவில் தேசிய விருது பெற்றது. மீனாவின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் த்ரிஷ்யம் 3. இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X