குழப்பமா இருக்கு.. 4,5 கதை ரெடி .. நடிகரை தேடிக்கொண்டு இருக்கிறேன்.. லவ்டுடே பிரதீப் எக்ஸ்க்ளுசிவ்!

சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாகவும் நடித்தள்ள திரைப்படம் தான் லவ் டுடே.

லவ் டுடே படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகிபாபு, ரவீனா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எனக்கு பிடித்த பாடல்

எனக்கு பிடித்த பாடல்

கேள்வி: விஜய் நடித்த லவ் டுடே படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ட்விஸ்ட் மாதிரி இப்படத்திலும் இருக்கிறதா?

பதில்: இப்படத்திலும் நிறைய ட்விஸ்ட் இருக்கிறது. அந்த மாதிரி இருக்குமா என்று சொல்ல முடியாது. இந்த படத்திற்கு என்ன தேவையோ அது இருக்கும். கண்டிப்பாக நல்ல விஷயம் சொல்லியிருக்கிறோம். விஜய் நடித்த படத்தில் என்ன அழகு, எத்தனை அழகு என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.

ஒத்துக் கொள்ளமாட்டார்

ஒத்துக் கொள்ளமாட்டார்

கேள்வி: நீங்கள் ரஜினி மாதிரி பார்ப்பதாகவும், தனுஷ் மாதிரி உருவத்தில் காணப்படுவதாகவும், குரலில் பிரபுதேவா மாதிரி இருப்பதாக கூறுகிறார்கள். அது குறித்து உங்கள் கருத்து...

பதில்: நான் நடிகர் பிரபுதேவாவுடன் பேசியிருக்கிறேன். கண்டிப்பாக அவர் ஒத்துக் கொள்ள மாட்டார். நடிகர் பிரபுதேவாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ரஜினி, தனுஷ் ஆகியோருடன் ஒப்பிடும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

எனக்கு அதிகம் சுதந்திரம்

எனக்கு அதிகம் சுதந்திரம்

கேள்வி: மரியாதை என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்?

பதில்: எனக்கும், அண்ணனுக்கும் 15 வயது வித்தியாசம். எங்கள் குடும்பத்தில் எனக்கு அனைத்து சுதந்திரமும் கொடுத்தனர். உனக்கு என்ன வேண்டுமோ நீயே பார்த்துக் கொள் என்று கூறிவிடுவார்கள். சின்ன வயதிலிருந்து தனியாகவே இருக்கிறேன் என்றார். மேலும் அவர் கூறுகையில், Observation என்பது நீங்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்வதை விட, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை கேட்பது தான் முக்கியம். அது தான் மரியாதையும் கூட. மேலும் Observation என்பது நான் என்ன நினைக்கிறேன் என்பதை விட, அவர்கள் என்ன நினைத்து சொல்கிறார்கள் என்பது தான் முக்கியம். ஒருவர் நம் மீது கோபப்படுகிறார் என்றால் அவர் மீது நாம் கோபப்படுவதை விட்டுவிட்டு, அவர் எதனால் நம் மீது கோபப்படுகிறார் என்று யோசித்து பார்ப்பேன் என்றார்.

நான் குழப்பமாக இருக்கிறேன்

நான் குழப்பமாக இருக்கிறேன்

கேள்வி: உங்களுடைய அடுத்தப்படம் என்ன?

பதில்: எதிர்காலம் குறித்த நிறைய கதைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. நானே குழப்பமாக இருக்கிறேன். 4 முதல் 5 கதைகள் உள்ளன. எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு என்ன தேவையோ, அந்த கதையை கண்டிப்பாக எடுப்பேன் என்றார். என்னை பொறுத்தவரை நடிகருக்காக கதை எழுத மாட்டேன். எனது கதைக்கு எந்த நடிகர் சரியாக இருப்பாரோ அவரை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன். அது நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், பிரபுதேவா யாராக இருந்தாலும் சரி என்றார்.

7 சென்சார் கட்

கேள்வி: உங்கள் பதில் அதிகமாக கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்து உள்ளதே.. அது குறித்து...

பதில்: கோமாளி படத்தில் சென்சார் போர்ட்டில் 21 இடங்களில் கட் செய்யப்பட்டது. ஆனால் இந்த படத்தில் 7 படத்தில் மட்டுமே கட் செய்யப்பட்டது. டிரெய்லரில் வரக்கூடிய கெட்ட வார்த்தை வசனம் மட்டும் கொஞ்சம் அதிகம். மற்றபடி மற்ற வார்த்தைகள் அனைத்தும் பொதுவானது என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=fHreSBawzWg&t=7s இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X