எனக்கு கெட்ட பழக்கம் இருக்கு..விஜயுடன் பேச்சு வார்த்தை இல்லை..உண்மையை போட்டுடைத்த நடிகர் ஸ்ரீகாந்த்!

சென்னை: அவினி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, நடிகைகள் மாளவிகா சர்மா, அமிர்தா, சம்யுக்தா, ரைசா, டி.டி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காபி வித் காதல்.

இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நவம்பர் 4ம் தேதி வெளியிடுகிறது. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

அப்பா என்று சொல்லாதே

அப்பா என்று சொல்லாதே

கேள்வி: உங்களுடைய சினிமா பயணம் குறித்து...

பதில்: நான் சினிமாத்துறைக்கு வந்து 20வருடம் முடிந்து விட்டதா? நமக்கு வயதாகி விட்டதே என்ற எண்ணம் தான் வருகிறது. என் பையனிடம், என்னை அப்பா என்று சொல்லாதே, பிரதர் என்று அழையுங்கள் என்று கூறுவேன். இன்றும் நான் முதல்படத்தில் நடிப்பதுபோல் தான் உணர்கிறேன். அப்பொழுது தான் படம் நன்றாக வரும். பயம் இருந்தால் அனைத்து காரியங்களும் நன்றாக நடைபெறும். இத்தனை வருடங்களில் நிறைய இடைவெளி, ஏற்றம், இறக்கம், மனப்போராட்டம், தன்னம்பிக்கை போன்ற நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்றார்.

தான, தர்மங்கள்

தான, தர்மங்கள்

கேள்வி:

வரும் 7ம் தேதி நடிகர் கமலஹாசனின் பிறந்த நாள். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்:

எனக்கு பிடித்த நடிகர் கமலஹாசன். என்னுடைய திருமணத்திற்கு முதல் நபராக வந்தவர்கள் நடிகர் விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர். எனக்கு விபத்து ஏற்பட்டபோது, நிறைய உதவிகளை செய்தவர் நடிகர் விஜயகாந்த். என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். நடிகர் கமலஹாசனை பொறுத்தவரை, அவரது பிறந்த நாளன்று அவரது செய்யும் தான, தர்மங்களை எனது கையில் கொடுத்து செய்ய சொல்லுவார். இதை ஏன் செய்கிறார் என்றால், அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும் என்பதற்காக தான். அவர் செய்யக்கூடிய தான, தர்மங்கள் அடுத்த தலைமுறையினரும் மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவர். வரும் 7ம் தேதி பிறந்த நாள் கொண்டாட இருக்கும் நடிகர் கமலஹாசனுக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

ஓடி வந்து விட்டோம்

ஓடி வந்து விட்டோம்

கேள்வி: ஸ்ரீகாந்த்,நீங்கள் நடித்துள்ள படங்களில், எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நீங்கள் விரும்புகிறீர்கள்?

பதில்: உயிர் படத்தின் தயாரிப்பாளர் இரண்டாம் பாகம் எடுக்கலாமா என்று என்னிடம் கேட்டார். நானும் சரி என்று கூறியுள்ளேன். விரைவில் கதை ரெடியாகிவிடும். மேலும் இயக்குநர் சங்கரிடம், நண்பன் படத்தின் இரண்டாம் பாகத்தை Zindagi Na Milegi Dobara படத்தை கொண்டு எடுக்கலாம் என்று நாங்கள் மூவரும் தெரிவித்தோம். அவர் அந்த படத்தில் நடித்தவர்கள் ஆகாயத்தில் இருந்து இறங்குவது போல் காட்சி இருக்கும். நீங்களும் செய்வீர்களா என்று கேட்டார். அங்கிருந்து நாங்கள் ஓடிவந்து விட்டோம் என்றார் ஜாலியாக..

விரைவில் சொந்த கம்பெனி

விரைவில் சொந்த கம்பெனி

கேள்வி: ஸ்ரீகாந்த், தற்போது நடிகர் விஜய் உடன் தொடர்பில் உள்ளீர்களா?

பதில்: தற்போது தொடர்பில் இல்லை. நண்பன் படத்திற்கு முன்பு நானும், அவரும் பழகி வந்தோம். நண்பன் படத்திலும் நானும் அவரும் நண்பராகவே நடித்தோம். என்னிடம் உள்ள மிகப்பெரிய கெட்டபழக்கம் என்னவென்றால் Keep in Touch என்பது கிடையாது. அந்த பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அது முடியவில்லை என்றார். விரைவில் சொந்தமாக திரைப்படம் தயாரிக்கும் கம்பெனியை தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/jSMpaYGqask இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X